(க.கமலநாதன்)

Image result for பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில

தற்போதை அரசாங்கம் இந்தியாவிற்கு படிந்து செல்கின்றது. அதனால் இலங்கை இந்தியாவின் 30 ஆவது பிராந்தியமாக உருமாறும் கள்ளத்தோணிகளின் ஆக்கிரமிப்பும் மீண்டும் ஆரம்பிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தமிழர்களுக்காக தமிழ் நாட்டவர் வடித்தது முதலைக் கண்ணீர் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.