இரத்தினபுரி - கிரியெல்ல, பஹலகம பகுதியில் மனைவியை தாக்க முயன்ற கணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கணவன் மனைவியை தாக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்திலிருந்த அயலவர்கள் குறித்த கணவனை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.