இன்றைய வானிலை 

27 Feb, 2024 | 06:59 AM
image

நுவரேலியா, மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்  சில இடங்களிலும் அத்துடன் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்  காணப்படுகின்றது. 

மத்திய மலைப்பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும் அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

திருகோணமலை  தொடக்கம் மட்டக்களப்பு   ஊடாக பொத்துவில்  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில்  இருந்து  காற்று வீசும். 

கொழும்பு  தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன் காலி  தொடக்கம் மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை,பொத்துவில்  ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22
news-image

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம்...

2025-02-09 17:15:32