மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் பணிபுறக்கனிப்பு ; 2 நாளாகத் தொடர் ஆர்பாட்டம்

Published By: Vishnu

27 Feb, 2024 | 01:25 AM
image

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தம்மை பொலிஸ் அடிமையிலிருந்து விடுவிக்குமாறும் வழங்கப்பட்டுவரும் மாதாந்த சம்பளமான 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்தை உயர்த்தி தருமாறும் பணியை நிரந்தரமாக்குமாறு கோரி  திங்கட்கிழமை (26) இரண்டாவது நாளாக பணிபுறக்கணிப்பு மேற்கொண்டுவருவதுடன்  மட்டு. புகையிரத நிலையத்தின் முன்னால்; தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த 2013 ம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளால் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களாக நியமிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு 250 ரூபா வீதம் மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா கொடுக்கப்பட்டுவருகின்றது எனவே தற்போது குடும்ப செலவுக்கு மாதாந்தம் 35 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது எனவே சம்பளத்தை உயர்த்தியும் பணியை நிரந்தரமாக்கியும் தருமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடமையாற்றிவரும் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) பணியை புறக்கணித்து ஆர்பாட்ட போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த ஆர்பாட்டம் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றுவருவகின்ற நிலையில் இதில் கலந்துகொண்ட ஊழியர்கள் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் எங்களை பொலிசார் அடிமைகளாக நடாத்துகின்றன நாங்கள் கடந்த 10 வருடத்துக்கு மேலாக இந்த பாதுகாப்பற்ற கடவை ஊழியர்களாகக் கடமையாற்றி வருகின்றோம்

இதில் மாதம் 31 நாளும் வேலை செய்தால் 7 ஆயிரத்து 500 ரூபா ஒருநாள் லீவு எடுத்தல் சம்பளத்தில் 500 ரூபாவை வெட்டுவார்கள் தினமும் காலையிலிருந்து இரவு வரை கடமையில் இருக்கவேண்டும் அங்கு கடவை கேற்றுக்கள் கூட சீரானது இல்லை நாங்கள் அங்கு இருப்பதற்கு கூட சீரான கொட்டகையில்லை மழையிலும் வெய்யிலிலும் பல்வேறு அளெகரியங்கள் மத்தியில் வேலை செய்துவருகின்றோம்.

இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மாதாந்தம் குடும்பம் ஒன்றின் செலவுக்கு 35 ஆயிரம் ரூபா தேவையான நிலையில் 8 மணிநேர வேலைக்கு நாள் ஒன்றிற்கு 250 ரூபா 31 நாள்வேலை இந்த சம்பளத்துடன் எவ்வாறு வாழமுடியம் எனவே இந்த வேலையை விட்டு நாங்கள் விலகி செல்வதாக இருந்தால் இந்த சம்பளத்திற்கு ஒருவரைத் தந்து விட்டு செல்லுமாறு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எனவே வேலையை விட்டு போகவும் முடியாது சம்பளத்தை கூட்டியும் தராமல் பொலிசார் எங்களை அடிமைகளாக நடாத்துகின்றனர்.  அரசியல்வாதிகளிடம் முறையிட்டோம் அதற்கு கூட எதுவிதமான தீர்வும் இல்லை ஞாயிற்றுக்கிழமை (25) இரவு மட்டு கருவப்பங்கேணி ரயில் தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்தார் ஒருவரின் உயிர் வெறும் 250 ரூபாவா?  எனவே எங்களுக்கு தீர்வு தரும்வரை இந்த போராடம் தொடரும் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் வெளிவிவகார அமைச்சின்...

2024-04-23 16:27:31
news-image

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில்...

2024-04-23 15:09:52
news-image

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

2024-04-23 16:22:01
news-image

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர...

2024-04-23 15:15:39
news-image

உலக புத்தக தினம் இன்று

2024-04-23 15:22:07
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57