பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ

Published By: Vishnu

26 Feb, 2024 | 07:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது கட்சியின் உறுப்பினரல்ல, எமது கட்சியில் போட்டியிடுவதா,இல்லையா என்பதை அவர் முதலில் தீர்மானிக்க வேண்டும்.பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் கட்சியின் உறுப்பினர்களுடன் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி – முக்கிய விடயங்கள் ஏதும் பேசப்பட்டதா ?

பதில் - எந்நாளும் விசேட பேச்சுவார்த்தைகள் தான்

கேள்வி – பேச்சுவார்த்தையில் எவ்விடயங்கள் பற்றி பேசினீர்கள்?

பதில் - அரசியல் தரப்பினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பலவிடயங்கள் பற்றி பேசினோம்.கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ இன்னும் இருவாரங்களில் நாட்டுக்கு வருகைத் தருவார். அதன் பின்னர் அரசியல் கூட்டணி பற்றி கலந்துரையாடுவோம்.

கேள்வி – ரணில் விக்கிரமசிங்க, நாமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோரில் யார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ?

பதில் - யாரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதை கட்சியின் நிறைவேற்று சபையே தீர்மானிக்கும்.ரணில் விக்கிரமசிங்க எமது கட்சியின் உறுப்பினரல்ல, எமது கட்சியில் போட்டியிடுவதா,இல்லையா என்பதை அவர் முதலில் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி – உங்களை போன்று நாமல் ராஜபக்ஷவும் தற்போது விகாரைகளுக்கு செல்கிறார் ?

பதில் - தந்தை சென்ற பாதையில் தான் மகனும் செல்ல வேண்டும். அவர் பௌத்தர் ஆகவே விகாரைகளுக்கு செல்கிறார்.

கேள்வி – சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளனர். ?

பதில் -சபாநாயகரை நாங்கள் பாதுகாப்போம். நம்பிக்கையில்லா பிரேரணையை  நிச்சயம் தோற்கடிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில்...

2024-04-23 15:09:52
news-image

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர...

2024-04-23 15:15:39
news-image

உலக புத்தக தினம் இன்று

2024-04-23 15:22:07
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57