பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார கொலை தொடர்பில் விசாரணைகளில் வெளிவந்தவை!

Published By: Vishnu

26 Feb, 2024 | 05:55 PM
image

எல்பிட்டிய, பத்திராஜ வத்த பகுதியில் திங்கட்கிழமை (26)  சுட்டுக் கொல்லப்பட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் டபிள்யூ.டி. ரொஷான் புஷ்பகுமார என்பவர்  தனது இளைய மகனை முதலாம் ஆண்டுக்கு அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிர்வாக பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய 51 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

எல்பிட்டிய பதில் நீதிவான் வஜிரா பொன்னம்பெரும சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

கொலை செய்யப்பட்ட  புஷ்பகுமாரவின் மனைவி ஆசிரியை என்பதுடன், அவர் எல்பிட்டிய எல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அதிகாலையில் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது  அவரது தாயும் இளைய மகன்களும் வீட்டில் இருந்தனர்.

இளைய மகன் இன்று முதலாம் ஆண்டுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில்...

2024-04-23 15:09:52
news-image

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

2024-04-23 16:22:01
news-image

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர...

2024-04-23 15:15:39
news-image

உலக புத்தக தினம் இன்று

2024-04-23 15:22:07
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25