'கலா பொல' திறந்தவெளி ஓவியச் சந்தை 31ஆவது ஆண்டை எட்டியது

26 Feb, 2024 | 07:35 PM
image

லங்கையில் வருடாந்தம் இடம்பெறுகின்ற திறந்தவெளி ஓவியச் சந்தையான கலா பொல, கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், தற்போது 31ஆவது ஆண்டை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

1993ஆம் ஆண்டில் ஜோர்ஜ் கீற் நிதியம் (George Keyt Foundation) கலா பொல என்ற எண்ணக்கருவுக்கு செயல் வடிவம் கொடுத்தது. 1994ஆம் ஆண்டு முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் வர்த்தக சமூக நலன்புரி முயற்சிகளின் அங்கமாக, கலா பொல நிகழ்வுக்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.

ஓவியங்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கலைச் சமூகத்துடன் ஓவியக் கலைஞர்கள் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு நாட்டில் மிகப் பாரிய களத்தை கலா பொல அவர்களுக்கு வழங்குவதுடன், அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான சந்தைக்களம் மற்றும் இடத்தையும் வழங்கி, தேசத்தின் படைப்பாக்கத் திறன் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.

இந்த ஆண்டு நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து கலந்துகொண்ட 350க்கும் மேற்பட்ட உள்நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான சந்தோஷ் ஜா நிகழ்வின் உத்தியோகபூர்வ வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் பவுண்டேஷன் தொடர்பான விபரங்கள் 7 பல்வேறுபட்ட தொழில் துறைகளில், 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் வர்த்தக சமூக நலன்புரி அங்கமான ஜோன் கீல்ஸ் பவுண்டேஷனின் ஆறு முக்கியமான இலக்குகளில் ஒன்றாக கலைகள் மற்றும் கலாசாரம் காணப்படுகின்றது. 

150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுடன், 14,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள ஜோன் கீல்ஸ் குழுமம், கடந்த 18 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையில் ‘மிகவும் நன்மதிப்புடைய நிறுவனமாக’ (Most Respected Entity) தரப்படுத்தப்பட்டுள்ளது. 

Transparency International Sri Lankaஇன் 'Transparency in Corporate Reporting Assessment'இல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி முதல் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச பொருளாதார மன்றத்தின் பூரண அங்கத்துவ நிறுவனமாக உள்ளதுடன், ஐநா சர்வதேச உடன்படிக்கையிலும் பங்காளராகவுள்ள ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஜோன் கீல்ஸ் பவுண்டேஷன் ஊடாக “எதிர்காலத்திற்காக தேசத்தை வலுவூட்டுதல்” (Empowering the Nation for Tomorrow) என்ற தனது வர்த்தக சமூக நலன்புரி குறிக்கோளை முன்னெடுத்து வருகின்றது. அதன் சமூக தொழில் முயற்சியாண்மை முன்னெடுப்பான ‘Plastic cycle’ என்பது இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டை கணிசமாக குறைப்பதற்கு ஒரு உந்துசக்தியாக காணப்படுகிறது.

ஜோர்ஜ் கீற் பவுண்டேஷன் தொடர்பான விபரங்கள் வளர்ந்து வரும் கலைஞர்கள் தமது படைப்புக்களை மேம்படுத்தி, வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பளித்து, அதன் மூலமாக பரந்த சமூகத்தின் மத்தியில் வாய்ப்புக்களைப் பெற்று, தமது திறமைகளை காண்பிப்பதற்கு உதவும் வகையில் 1980களில் இருந்து கண்காட்சிகள் மற்றும் படைப்பாக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, வழங்கி வருகின்ற ஜோர்ஜ் கீற் பவுண்டேஷன், கலைகள் மற்றும் கலாசாரத்தை ஊக்குவித்து, புத்துயிரளிப்பதில் கணிசமான பங்களிப்புக்களை ஆற்றி வருகின்றது. 

கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை இந்த அறக்கட்டளை முன்னெடுத்துள்ளது. நாற்பது வயதுக்கு கீழ்ப்பட்ட கலைஞர்களுக்காக 1991ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகின்ற Young Contemporaries நிகழ்வு அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

சிரேஷ்ட கலைஞர்களை உள்வாங்கும் வகையில், 1991ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட Sculpture and Painting எனும் முயற்சியானது தற்போது Sri Lankan Art என்ற பெயரில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

திறந்தவெளி ஓவியச் சந்தையான கலா பொல என்பது 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வருவதுடன், அன்று தொட்டு 2001 மற்றும் 2007 நீங்கலாக ஆண்டுதோறும் இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேர்ச்சி பெற்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு புதிய மற்றும் வளர்ந்துவரும் கலைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பளிப்பதற்காக இடம்பெறும் வருடாந்த கண்காட்சியான Nawa Kalakaruwo என்பது 1994ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 

இலங்கை ஓவியம் மற்றும் சிற்பங்களின் படைப்பாக்க நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள், கலைஞர் குழுக்களின் கண்காட்சிகள், விசேட ஓவியர்களின் மாதம் முழுவதும் இடம்பெறும் கண்காட்சிகள், இலங்கை மற்றும் வெளிநாட்டு ஓவியர்களின் தனிப்பட்ட கண்காட்சிகள் மற்றும் சார்க் ஓவியர்களின் கண்காட்சிகள் என பல நூற்றுக்கணக்கான படைப்பாக்க நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளை ஜோர்ஜ் கீற் பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46