அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை:  கணக்கெடுப்பில் தகவல்!

Published By: Vishnu

26 Feb, 2024 | 05:21 PM
image

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின்படி,  அரச  நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 29 சத வீதமானவை மட்டுமே சரியாக இயங்குவதாகவும் 49 சத வீதமானவை இயங்கவில்லை  என்றும், 22 சத வீதமானவை செயற்பாட்டில் இருந்தாலும்  யாருக்கும் பதிலளிப்பதில்லை என்றும்  தெரிய வந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் இந்த கணக்கெடுப்புத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட 276 பிரதேச சபைகளில் 98 பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 14 சத வீதமான தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை, 42 சத வீதமானவை  பதிலளிக்கப்படவில்லை.   44 சத வீதமானவை மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் பதிலளிக்கப்பட்ட   உத்தியோகபூர்வ  தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக   வழங்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பயனும் அல்லது பொருத்தமும் இல்லை என்றும் பேராசிரியர் அத்துகோரள மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41