எம்மில் சிலருக்கு சுவாசிப்பதில் அசௌகரியமான நிலை ஏற்படும். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அதே தருணத்தில் எதிர்பாராத விதமாக தோல், முகம், கை ஆகிய பகுதிகளில் திடீரென தடிப்புகள் தோன்றும். இரவு நேரங்களில் குளிர்சாதன வசதியுடன் உறங்கிக்கொண்டிருந்தாலும் வியர்வை உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் சர்கோயிடோசிஸ் எனப்படும் இணைப்பு திசுக்களில் உண்டாகும் தீங்கற்ற கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உணர்ந்துகொண்டு, உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சையும் ஆலோசனையும் பெற வேண்டும்.
சர்கோயிடோசிஸ் என்பது எம்முடைய உடலில் உள்ள திசுக்களின் ஏற்படும் வீக்க பாதிப்பாகும். இதன் போது வீக்கம் காரணமாக நுரையீரல், நிணநீர் முடிச்சுகள் ஆகிய இணைப்பு திசுக்களில் கட்டி போன்ற பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பு எந்த வயதிலும், எந்த பாலினத்தவரையும் பாதிக்கக்கூடும் என்றாலும், இருபது முதல் நாற்பது வயது வரை உள்ளளவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
மேலும், இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல் சுருக்க பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு பாரிய அச்சுறுத்தலையும் உண்டாக்கும். அதே தருணத்தில் இது புற்றுநோய் பாதிப்பு அல்ல என்பதையும், இதற்கு முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை பெற்றால் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்றும், இதற்கு தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் பலனளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக ஆரோக்கியமான திசுக்களை பாதிப்பதால் ஏற்படும் நோய்தான் சர்கோயிடோசிஸ். மேலும் மரபணு மாற்றம், சுற்றுப்புற சூழல் போன்றவற்றின் காரணமாகவும் இவை ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் சோர்வு, நிணநீர் முடிச்சுகளில் வீக்கம், திடீரென்று உடல் எடை குறைவு, கணுக்கால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம், ஒரு மாதத்திற்கு மேல் தொடரும் வறட்டு இருமல், அடிக்கடி ஏற்படும் அல்லது சீரான இடைவெளியில் ஏற்படும் நெஞ்சுவலி, தாடை பகுதிகளில் தோல் நிற மாற்றம், மூக்கு, கன்னம், காது போன்ற பகுதிகளில் நிற மாற்றம், பார்வையில் தெளிவின்மை, கண் வலி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம்.
இதற்கு குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, நெஞ்சக எக்ஸ்ரே, நுரையீரல் மற்றும் இதய செயல் திறனுக்கான பிரத்யேக பரிசோதனை, பெட் மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். பொதுவாக சாக்கோயிடோசிஸ் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு சிலருக்கு மட்டும் தானாக சரியாகிவிடும்.
ஆனால் பலருக்கும் இதன் போது பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் இத்தகைய பாதிப்பிற்குள்ளானவர்கள் மருத்துவர்களின் ஓராண்டிற்கும் மேலான தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும்.
- டொக்டர் பாலமுருகன்
தொகுப்பு : அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM