இலக்கியத்துறையில் முத்திரை பதித்த மற்றும் இலைமறைக்காய்களாக இருக்கும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் “உலகம் முழுவதும் எங்கள் கதைகள்” சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனை ஆஸாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் “பென் கிளப்” தலைவி எழுத்தாளர் சித்தி மசூறா சுஹூர்த்தீன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்றது.
ஆற்றலும் ஆளுமையும் மிக்க “இலங்கை பென் கிளப்” (Pen Club) உறுப்பினர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட இந்த சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வியும் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் தலைவியும் அவுஸ்திரேலியா நாட்டின் முஸ்லிம் பெண்கள் கவுன்சில் தலைவியுமான சட்டத்தரணி மரியம் நளிமுத்தீன் கலந்துகொண்டார்.
இதில் மரியம் நளீமுத்தினின் கணவர் கவிஞர் டொக்டர் நளிமுத்தீன் சிஹாப்தீன், பிரதி கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், இணைப்பாளர் மிப்ராஸ் மன்சூர் உட்பட பெண் எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், பெண் கிளப் நிர்வாக அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதம அதிதி பெண் ஆளுமை மரியம் நளிமுத்தீன் இலங்கை பெண் கிளப் அங்கத்தவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM