இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமாக செயற்பட்டு வருகின்றார்.

இதனை அவதானித்துவந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜோன்சன் கோஹ்லியின் செயற்பாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு வீரரும் ஆட்டமிழந்து செல்லும் போது கோஹ்லியின் சைகைகள், முக பாவனைகள் மற்றும் வார்த்தை பிரயோகங்கள் என்பவற்றில் அவதானமாக இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும் ஆட்டமிழக்கும் வீரரை வார்த்தை பிரயோகங்கள் மூலம் வழியனுப்பிவைப்பது எச்சரிக்கைக்குறியது என தெரிவித்துள்ளார்.

அதுமாத்தரமின்றி கோஹ்லி இவ்வாறு நடந்துக்கொள்ளவதற்கு காரணம், அவர் இந்த டெஸ்ட் தொடரில் ஓட்டங்களை பெறாத விரக்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 கோஹ்லி முதல் டெஸ்டில் 0, 13 ஓட்டங்களையும், 2 ஆவது டெஸ்டில் 12, 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.