Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட சலுகைகளை அறிமுகம்

26 Feb, 2024 | 04:58 PM
image

நாட்டின் கிழக்கு கரையோரத்தின் வனப்பை அனுபவித்து மகிழும் அனுபவத்தை உள்நாட்டவர்களுக்கு வழங்குவதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு Sun Siyam பாசிக்குடா விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. 

ஆகக்குறைந்தது இரண்டு இரவுகள் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு சகல உணவு மற்றும் பானங்களின் மீது 20% விலைக்கழிவு, ஸ்பா சிகிச்சைகளில் 10% விலைக்கழிவு, அறைகள் வெற்றிடமாக காணப்படும் நிலையில், இலவசமாக அறை மேம்படுத்தல் வசதி மற்றும் முன்கூட்டிய check-ins மற்றும் தாமதமான check-outs போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த விசேட சலுகை 2024 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை வழங்கப்படும் என்பதுடன், விருந்தினர்களுக்கு பாசிக்குடாவின் சிறந்த அனுபவத்தை சொகுசாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Sun Siyam பாசிக்குடா, சிறந்த உள்ளக வடிவமைப்புடன், செழுமையான வர்ணத் தெரிவுகளில் அமைந்த 34 இடவசதி கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட பெவிலியன்களைக் கொண்டுள்ளது.

விடுமுறையை அனுபவிப்பது என்பதற்கு அப்பால், சிறந்த அனுபவம், பாரம்பரிய கலாசார அனுபவம் மற்றும் மனம்மறவாத அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

பொழுதுபோக்கு அம்சங்களாக infinity pool அல்லது karaoke center இல் பொழுதை செலவிட முடிவதுடன், சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது, யோகா மற்றும் உளவளக்கலை அமர்வுகளில் ஈடுபடவும் முடியும்.

டெனிஸ் மற்றும் பெட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வசதியும் காணப்படுகின்றது. உள்நாட்டு கலை மற்றும் கலாசார அம்சங்களில் இணைந்து, பாசிக்குடாவின் கரையோர அம்சங்களை அனுபவிப்பதுடன், இரம்மியமான இரவு வேளையில், ஜொலித்திடும் நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து பிரத்தியேகமான இராப்போசணத்தை அருந்தி மகிழவும் முடியும்.

இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளை கொண்ட Sun Siyam பாசிக்குடா, இலங்கையின் கிழக்கு கரையோரப் பகுதியில் கிடைக்கும் சிறந்த வைன் பானத் தெரிவுகளை கொண்ட The Cellar ஐ கொண்டுள்ளது.

அதுபோன்று இலங்கைக்கு பிரத்தியேகமான தேநீர் அனுபவத்தை வழங்கும் வகையில் Tea House அமைந்துள்ளது.

நீச்சல் தடாகத்துக்கு அருகாமையில் உணவருந்தும் அனுபவத்தை வழங்கும் Slice & Grill, கரீபியன் தெரிவுகளில் குளிர் பான வகைகளை வழங்கும் Beach Shack போன்றன விருந்தினர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும். காலைப் பொழுதில், பொலன்னறுவை இராஜதானியை அல்லது மின்னேரிய தேசிய பூங்காவை சைக்கிளில் பார்வையிட்டு அனுபவிக்க முடியும்.

தம்புளையின் குகைத் தொகுதியை அல்லது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் சீகிரியா குன்றை பார்வையிட முடியும். மாலைப் பொழுதை ஹோட்டலில் செலவிடுகையில் எமது பிரத்தியேகமான வைன்களை அனுபவித்து மகிழக்கூடியதாக இருக்கும். 

Sun Siyam பாசிக்குடாவில், ஒப்பற்ற அனுபவம் வழங்கப்படுவதுடன், கிழக்கு கரையோரத்தின் விருந்தோம்பலை ஒவ்வொரு தருணத்திலும் பெறக்கூடியதாக இருக்கும். எமது இணையத்தளத்திலிருந்து பிரத்தியேக அனுகூலங்கள் மற்றும் விசேட அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லது முன்பதிவுகளுக்கு அழையுங்கள் 0652055555 அல்லது 0702424263. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்