நேச்சுரல் ஸ்டார்' நானி' நடிக்கும் 'சூர்யா'ஸ் சாட்டர் டே' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

26 Feb, 2024 | 02:45 PM
image

தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான தெலுங்கு நடிகரான நானி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சூர்யா'ஸ் சாட்டர்டே' படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர் வரும் ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூர்யா'ஸ் சாட்டர் டே' படத்தில் நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முரளி . ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

ஃபேண்டஸி எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கதாநாயகனான நானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக் குழுவினர் இந்த பிரத்யேக காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த காணொளி.. நடிகர் எஸ். ஜே. சூர்யாவின் பின்னணி குரலுடன் தொடங்குகிறது. இதில் 'கதையின் நாயகனான நானிக்கு கோபம் வந்தால்.. அதனை எழுதி வைத்துக் கொண்டு, வாரத்தில் இறுதி நாளான சனிக்கிழமை அன்று தன்னை கோபப்படுத்தியவர்களை வேட்டையாடுகிறான்' என்று அவர் சொல்லும் போது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லோகேஷ் கனகராஜின் 'கூலி'யாக மிரட்டும் சுப்பர்...

2024-04-23 16:22:20
news-image

ஹைபர்லிங்க் பாணியில் தயாராகும் 'நிறம் மாறும்...

2024-04-22 22:46:52
news-image

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சோனியா அகர்வாலின்...

2024-04-22 22:47:28
news-image

அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப்பச்சன்

2024-04-22 22:47:36
news-image

ஃபைண்டர் - விமர்சனம்

2024-04-22 22:47:46
news-image

போருக்குப் பின்னரான இருண்ட காலத்தை பேசும்...

2024-04-21 20:17:04
news-image

விஷாலின் 'ரத்னம்' 60 : 40

2024-04-20 17:24:06
news-image

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் 'ஒரு...

2024-04-21 07:23:44
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-21 07:24:08
news-image

நடிகர் கவினின் சம்பளத்தை மேலும் உயர்த்துமா...

2024-04-21 07:25:16
news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38