யாழில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஷ்டிப்பு

Published By: P. Saranya

26 Feb, 2024 | 02:27 PM
image

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று திங்கட்கிழமை (26) அனுட்டிக்கப்பட்டது. 

கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசாலையின் முன்றிலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. விரிவுரையாளர்களும் ஆசிரிய மாணவர்களும் மலர் வழிபாடு மேற்கொண்டனர். 

திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் ஆசிரிய மாணவர்களின் சிற்றுரைகள் இடம்பெற்றன. உரைகளை ஆற்றிய ஆசிரிய மாணவர்களுக்கு புத்தக பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இப்பரிசில்களை கலாசாலையின் மூத்த விரிவுரையாளர் மு.ஜெயக்குமாரி வழங்கினார். 

திருவள்ளுவர் குருபூசை மாசி மாத உத்திர நட்சத்திர நாளில் அனுஷ்டிக்கப்படுவது வழக்கமாகும். திருவள்ளுவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்து மாசி மாத உத்தர நட்சத்திரத்தில் பூரணமடைந்தார் என்பது தமிழ் அறிஞர்களின் நம்பிக்கையாகும். திரு வி.க., தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் போன்றோர் இக்கருத்தை வழிமொழிந்துள்ளனர். 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் தினமும் ஆரம்பிக்கப்படுவது பன்னெடுங்காலமாக வழக்கமாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20