காட்டு யானையை தத்தெடுப்பதற்கு தடை ; பங்களாதேஷ் நீதிமன்றம்

Published By: Digital Desk 3

26 Feb, 2024 | 05:03 PM
image

காட்டு யானைகளை தத்தெடுப்பதை பங்களாதேஷ்  நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (25) தடை செய்துள்ளது.

யானைகளை தத்தெடுத்து வளர்ப்பதற்கான அனைத்து உரிமங்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக  பங்களாதேஷ் பிரதி சட்டமா அதிபர் அமித் தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு மிருகங்கள் மீது மேற்கொள்ளப்படும் சித்தரவதைகளை தடுக்க அழுத்தம் கொடுக்கும்  மிருக உரிமை ஆர்வலர்களுக்கு வெற்றியின்  மைல் கல்லாக உள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.

மேலும், யானைகளை வளர்ப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டமை ஆசிய யானைகளை பயிற்சி என்ற பெயரில் சித்திரவதை செய்வது நிறுத்தப்படும் என மிருக உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷ் ஒரு காலத்தில் ஆசிய யானைகள் வாழும் முக்கிய இடங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளன. அவை தற்போது தெற்காசிய நாட்டில் மிகவும் ஆபத்தானதான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பங்களாதேஷில் சுமார் 100 ஆசிய யானைகள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், இது நாட்டில் காட்டிலுள்ள யானைகளில் பாதி அளவு என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் நாட்டின் வடக்கு மற்றும் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் யானைகள் வாழும் பகுதியில் மரம் வெட்டுதல் மற்றும் விவசாயம் செய்தல் போன்ற நடவடிக்கைகளால் சிறிய விலங்குகள்  சிறைப்பிடிக்கப்படுகின்றன.

மரங்களை இழுப்பதற்கு அல்லது சர்க்கஸ் காட்சிக்கு யானைகளை பயன்படுத்த வனத்துறை முன்பு அனுமதி வழங்கியது.

இதன்மூலம் பிச்சை எடுப்பதற்கும், தெருவில் மிரட்டி பணம் பறிப்பதற்கும்  யானைகளின் உழைப்பு சுரண்டப்படுவதால் உரிம விதிமுறைகளை மீறப்படுவதாக என குப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் வீதிகளில் பிச்சை எடுக்கப் பயன்படுத்திய குட்டி யானை ஒன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம்  சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எலொன் மக்ஸ்க் திமிர்பிடித்த கோடீஸ்வரர் ;...

2024-04-23 12:18:43
news-image

மோடி மீது சட்ட நடவடிக்கை” -...

2024-04-23 11:50:00
news-image

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 80க்கும் மேற்பட்ட...

2024-04-23 11:21:01
news-image

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு...

2024-04-23 10:13:02
news-image

இஸ்ரேல் காசா: இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாயின்...

2024-04-23 09:10:37
news-image

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல் -...

2024-04-22 15:53:50
news-image

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்:...

2024-04-22 11:41:18
news-image

‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில்...

2024-04-22 11:36:41
news-image

 'இஸ்ரேல் நடத்­தி­ய­து' ஒரு தாக்­கு­தலே அல்ல...

2024-04-22 11:19:36
news-image

காசாவின் நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள்...

2024-04-22 10:36:01
news-image

மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு...

2024-04-22 10:34:08
news-image

அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை...

2024-04-22 10:18:38