(நெவில் அன்தனி)
ஆசிய மோட்டார் ரேசிங் கழகத்துடன் (Asian Motor Racing Club) இணைந்து இலங்கை காரோட்ட சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கம் (Sri Lanka Association of Racing Drivers & Riders - SLARDAR) ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் மோட்டார் பந்தயத் தொடர் 2024 அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டித் தொடருக்கு நிப்பொன் பெய்ன்ட்ஸ் பிரதான அனுசரணை வழங்குகிறது.
இலங்கையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிவரும் தமது நிறுவனம், ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் 2024 போட்டிக்கும் பிரதான அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை அடைவதாக ஊடக சந்திப்பில் நிப்பொன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமயாளருமான நெமன்த அபேசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுப்பர் சீரீஸ் 2024 போட்டியை மிக சிறப்பாக நடத்தி முடிக்க இலங்கை காரோட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கம் ஏற்பாடுகளை பூர்த்திசெய்துள்ளது.
எட்டு காரோட்டப் போட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டப் போட்டிகளைக் கொண்ட ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் 2024 மோட்டார் பந்தயத் தொடர் மஹாமெருவ ரெலி குரொஸ் போட்டியுடன் ஆரம்பமாகிறது.
இப் போட்டி மார்ச் 16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெறும்.
தொடர்ந்து சிங்க்ள் ட்ரீ ஹில் க்ளைம்ப் போட்டி ஏப்ரல் 8, 9ஆம் திகதிகளிலும் மஹாமெருவ ரெலி குரொஸ் (2) போட்டி மே 4, 5ஆம் திகதிகளிலும் கெவல்ரி SX போட்டி ஜூன் 22, 23ஆம் திகதிகளிலும் மஹாமெருவ ரெலி குரொஸ் (3) ஜூலை 20, 21ஆம் திகதிகளிலும் மஹாமெருவ ஒட்டோ குரொஸ் (கழக நிகழ்ச்சி) ஆகஸ்ட் 17, 18ஆம் திகதிகளிலும் கட்டுகுருந்த சேர்க்கிட் போட்டி செப்டெம்பர் 14, 15ஆம் திகதிகளிலும் மஹாமெருவ மோட்டர் குரொஸ் (கழக நிகழ்ச்சி) நவம்பர் 16, 17ஆம் திகதிகளிலும் நடைபெறும்.
ஒவ்வொரு போட்டித் தொடரிலும் முதலாம் நாளன்று பயிற்சிகளும் நேரக் கணிப்புப் போட்டிகளும் 2ஆம் நாளன்று பிரதான போட்டிகளும் நடைபெறும்.
இப் போட்டிகள் யாவும் நிறைவடைந்த பின்னர் வருட இறுதியில் SLARDAR பரிசளிப்பு விழா நடைபெறும்.
இந்த வருடப் போட்டித் தொடருக்கு நிப்பொன் பெய்ன்ட்ஸ் பிரதான அனுசரணை வழங்குகிறது.
அத்துடன் மெக்சிஸ் டயர்ஸ், பிரிமா கொத்துமீ, ஓஸோன் வோட்டர், ஸ்ரீலங்கா காப்புறுதி நிறுவனம், எஸ்டீ பெற்றரி ஆகிய நிறுவனங்கள் இணை அனுசரணை வழங்குகின்றன.
கடந்த வருட ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் தொடரில் லஹிரு ஜீவந்த அதிசிறந்த மோட்டார் சைக்கிளோட்டியாகவும்லஹிரு ஜீவந்த அதிசிறந்த சாரதியாகவும் தெரிவாகி வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்தனர்.
இந்த வருடம் அவர்கள் இருவருக்கும் ஏனைய வீரர்களிடம் இருந்து பலத்த சவால் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த வருடப் போட்டிகள் யாவும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவையாக நடைபெறும் எனவும் இலங்கை காரோட்ட சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கத் தலைவர் ஷமீர அபேநாயக்க தெரிவித்தார்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM