மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான மார்லன் சாமியல்ஸ் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புவதாக இணையத்தளத்தில் காணொளி வழியாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “ஐ.சி.சி. மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்வது அவசியம். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்புகின்றனர். பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும். 

நான் சாகும்வரை இதற்கான தொடர்ந்து ஊக்குவிக்கும் பணியில் ஈடுபடுவேன். பாக்கிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டிக்கு சிறந்த  பாதுகாப்பு வழங்கிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புகிறேன். பாகிஸ்தான் இராணுவத்துக்கு எப்பொழுது அழைக்கின்றீர்களோ அப்போது நான் இராணுவத்தில் இணைவேன்” என தெரிவித்துள்ளார்.