அலெக்ஸி நவால்னியின் மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இதனை அறிவித்துள்ளார்.
நவால்னியின் மரணம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் நவால்னியின் மனிதஉரிமைகளை மோசமாக மீறியவர்களை பொறுப்புக்கூறச்செய்வதை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளே இந்த தடைகள் என தெரிவித்துள்ளார்.
நவால்னியின் மரணத்திற்கு காரணமானவர்களும் ரஸ்ய அரசாங்கமும் பொறுப்புக்கூறச்செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக எங்கள் சகாக்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவால்னி நடத்தப்பட்ட விதம் மற்றும் மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியும் அரசாங்கமுமே காரணம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருதுகின்றது என தெரிவித்துள்ள ரிச்சட்மார்லஸ் இது குறித்து சுயாதீன வெளிப்படையான விசாரணைகளை கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM