ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இரண்டாவது இளநீர் செய்கை கிராமத்தை அமைக்கும் வேலைத்திட்டம் நிறைவு

26 Feb, 2024 | 12:52 PM
image

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முறுதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (25) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு கீழ் முறுதவெலயில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ்விரு கிராமங்களிலும் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

இந்த வகையில்  வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.   

2022 ஆம் ஆண்டில் இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் (2023) ஆறு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது . 

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் இருந்து அதிகபட்ச இளநீரை அறுவடை செய்வதற்காக, குறிப்பாக முறுதவெல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

அதன்படி, இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி ரலுவ கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விவசாயிகளுக்கு  1,600 இளநீர் கன்றுகளை நேற்று  ஞாயிற்றுக்கிழமை (25) விவசாய அமைச்சர் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52