மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி

26 Feb, 2024 | 12:02 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2ஆவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது வெற்றியை ஈட்டியது.

குஜராத் ஜயன்ட்ஸுக்கு எதிராக பெங்களூர் எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் 11 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றது.

இந்த வருட ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை கடைசிப் பந்தில் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அமேலியா கேரின் சகலதுறை ஆட்டம், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் சிறப்பான துடுப்பாட்டம் என்பன மும்பையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

முதலிரண்டு விக்கெட்களை 21 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்ட மும்பை இண்டியன்ஸ் அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி வெற்றியை தனதாக்கியது.

நெட் சிவர் ப்றன்ட் 22 ஓட்டங்க்ளைப் பெற்று ஆட்டம் இழந்தார். (49 - 3 விக்.)

அதனைத் தொடர்ந்து ஹாமன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

அமேலியா கேர் 31 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 - 5 விக்.)

எனினும் ஹாமன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் தனுஜா கன்வார் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப்  பெற்றது.

துடுப்பாட்டத்தில் நான்கு வீராங்கனைகள் மாத்திரமே 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பின்வரிசை வீராங்கனை தனுஜா கன்வார் அதிகப்பட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி பெத் மூனி 24 ஓட்டங்களையும் கெத்ரின் ப்றய்ஸ் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷப்னிம்  இஸ்மாய்ல் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47
news-image

நஞ்சிங் உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்க...

2025-03-14 13:39:02
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சங்கா சதம்...

2025-03-12 17:16:17
news-image

ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலைநாட்டி...

2025-03-10 18:33:39
news-image

மாளிகாவத்தை யூத்தை அதிரவைத்து 3 -...

2025-03-09 23:17:50
news-image

நியூஸிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா...

2025-03-09 23:53:26