உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனையில் பற்சிகிச்சை முகாம்

26 Feb, 2024 | 11:52 AM
image

உலக வாய் சுகாதார தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த மாபெரும் பற்சிகிச்சை முகாம் கடந்த வெள்ளிக்கிழமை (23) பெரியநீலாவனை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஒருங்கிணைப்பில், 'மகிழ்ச்சியான வாய் ஆரோக்கியமான உடல்' எனும் தொனிப்பொருளில், பிராந்திய வாய் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.சரூக் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இதன்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், இலங்கை பல் மருத்துவர் சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் டொக்டர் ரீ.கேதீசன், செயலாளர் டொக்டர் எஸ்.லிவிட்டன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், பல் மருத்துவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண பல் மருத்துவ சங்கத்தின் வருடாந்த மாநாட்டினை தொடர்ந்து இடம்பெற்ற இந்த பற்சிகிச்சை மருத்துவ முகாமில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். 

அதனைத் தொடர்ந்து, வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றும் இடம்பெற்றது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ஆம் திகதி உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மார்ச் மாதத்துக்கு முந்தைய மாதம் மற்றும் பிந்தைய மாதத்தினையும் தேசிய வாய் சுகாதார விழிப்புணர்வு மாதங்களாக பிரகடனப்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு இம்முறை கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46