விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தேமுதிகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவ்வப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM