(பா.ருத்ரகுமார்)

பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதிஆணைக்குழுவில் இன்று இரண்டாவது நாளாக முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் வாக்குமூலம் அளித்தார். மூடிய அறைக்குள்  நடந்த இவ்விசாரணை மூன்று மணிநேரத்துக்கு மேலாக நீடித்திருந்தது. 

மத்தியவங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 1 மணியளவில் நிறைவடைந்தன. 

இந்நிலையில் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் ஆணைக்குழுவுக்கு 9.15 மணியளவில் வருகைத்தந்திருந்தார். அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதிஆணைக்குழு பின்னர்  01.00 மணியளவில் விசாரணைகளை முடித்திருந்தது. அதன் பின்னர் ஆளுனரின் தரப்பு சட்டத்தரணிகளிடமும் இரண்டு மணிநேர சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை தனது முதலாவது சாட்சியத்தை அளித்த முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு இன்று சாட்சியமளிக்க  அழைக்கப்பட்டிருந்தார். மூடிய அறையில் விசாரணைகள் நடைபெற்றிருந்ததோடுஅங்கு ஊடவியலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.