வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை. அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM