வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெனார்ன்டோவின் ஆலோசனைக்கமைய "ரோயல் டேப்" கிளப்பினால் நுவரெலியாவில் குதிரை ஓட்ட போட்டி சனிக்கிழமை (24) இடம்பெற்றது.
நுவரெலியா குதிரை பந்தய திடலில் சனிக்கிழமை (24) இடம்பெற்ற குதிரை ஓட்ட போட்டியில் நான்கு சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுப் போட்டியில் அசரங்க மற்றும் பிரபா ஜெயரத்தின ஆகிய குதிரை பந்தய உரிமையாளர்களின் சார்பாகப் போட்டியில் பங்கு பெற்றிருந்த குதிரை ஓட்ட வீரர் பி.விக்ரமன் என்பவர் வெற்றி பெற்றார்.
அதேநேரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது சுற்று குதிரை ஓட்ட போட்டியில் எல்.ரவிக்குமார்,மற்றும் பி. எஸ் கவிராஜ் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தார்கள்.
இவ்விரு போட்டியாளர்களும் திரு, திருமதி எட்வர்ட் என்பவரின் குதிரைப் பந்தயத்தின் உரிமையாளர் சார்பாகப் போட்டியில் பங்குப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நுவரெலியாவில் எதிர்வரும் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த குதிரை ஓட்ட பந்தய போட்டியில் நான்கு சுற்று போட்களிலும் பங்குபற்றி வெற்றியீட்டிய வீரர்களுக்கு கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த போட்டி நிகழ்வில் வெளிநாட்டுப் பயணிகள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டதுடன், பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM