(க.கமலநாதன்)

பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுக்கு ஒருவார பாராளுமன்றத் தடை விதிக்கப்ட்டமை நியாயமற்ற செயற்பாடாகும் இது சபாநாயகர் ஆளும் தரப்புக்கு பக்கசார்பாக வழங்கிய தீர்ப்பாகும்.

அதனால் அவர்மீது நாம் கொண்டிருந்த மரியாதையும் கெளரவமும் குறைவடைகின்றது. சபாநாயகரின் கெளரவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தால் அவர் பதவி விலகிச்செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.