நாட்டில் சில பகுதிகளில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவை குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள கங்கையில் நிர்வாணமாக காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளது . இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை .
பேலியகொட 4 ஆம் மைல் கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில் ரயிலால் மோதுண்டு உயிரிழந்த 35 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சட்டை மற்றும் கறுப்பு நிறத்திலான காற்சட்டை அணிந்திருந்துள்ளார் . வலது கையில் பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
மாரவில பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 55 முதல் 60 வயதுடைய ஆண் ஒருவராவார்.
ராகமை - கடவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர் சாம்பர் நிற புடவை மற்றும் கறுப்பு கை சட்டை அணிந்திருந்துள்ளார் . உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM