சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தின், தாய்ஜோ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

வலது பக்கமாக சைக்கிளொன்றை செலுத்திவந்த நபரொருவர் திடீரென அடுத்ததுடுத்து குறுகிய இடைவெளியில் சென்றுக்கொண்டிருந்த கார் மற்றும் பாரவூர்திக்கிடையில் செலுத்தியுள்ளார். 

இவ்வாறு செலுத்தும் போது, சைக்கிள் பாரவூர்தியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டதுடன், குறித்த நபர் பாரவூர்திக்கு அடிப்பக்கம் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில் பாரவூர்தி சாரதி வாகனத்தை சிறிது முன் பக்கமாக செலுத்தியதும், சைக்கிளை செலுத்தியவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷடவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.