(நெவில் அன்தனி)
ரஞ்சி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சுழல்பந்துவீச்சாளர் ஷொயெப் பஷிரின் சுழற்சியில் திக்குமுக்காடிய இந்தியா, இன்றைய (24) இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க, இங்கிலாந்தை விட 134 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது.
இந்திய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
விசாகப்பட்டின டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 20 வயதான பஷிர் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 30 ஓவர்கள் தொடர்ச்சியாக பந்துவீசி 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை நெருக்கடிக்குள் ஆழ்த்தினார்.
இந்தியா சார்பாக 40க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற ஒரே ஒரு வீரரான யஷஸ்வி ஜய்ஸ்வாலின் விக்கெட்டையும் பஷிர் கைப்பற்றினார்.
போட்டியின் 3ஆவது ஓவரில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (2) ஆட்டம் இழந்தார்.
ஜய்ஸ்வால், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கையை ஊட்டினர். ஆனால் அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை.
ஷுப்மான் கில் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த பின்னர் இந்தியாவின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
யஷஸ்வி ஜய்ஸ்வால் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பஷிரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
ஆட்ட நேர முடிவில் த்ருவ் ஜுரெல் 30 ஓட்டங்களுடனும் குல்தீப் யாதவ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பஷிரை விட டொம் ஹாட்லி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
போட்டியின் இரண்டாம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து கடைசி விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 353 ஓட்டங்களாக இருந்தது.
31 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஒலி ரொபின்சன் தனது 19 ஆவது டெஸ்டில் முதலாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
53 ஓட்டங்களைப் பெற்ற அவர் 8ஆவது விக்கெட்டில் ஜோ ரூட்டுடன் 102 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஜோ ரூட் 122 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பந்துவீச்சில் ரவீந்த்ர ஜடேஜா 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 78 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM