தயாரிப்பு : வைட் கார்பட் ஃபிலிம்ஸ்
நடிகர்கள் : சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மதுசூதனன் ராவ், சுப்ரமணிய சிவா, பவெல் நவகீதன், ஜப்பான் குமார் மற்றும் பலர்.
இயக்கம் : வெங்கி
மதிப்பீடு : 2.5/5
'நாய் சேகர்', 'கான்ஜுரிங் கண்ணப்பன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கொடுத்த வெற்றியின் காரணமாக கதையின் நாயகனாக இல்லாமல்... கதாநாயகனாக நடிகர் சதீஷ் நடித்திருக்கும் 'வித்தைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்ததா? இல்லையா? என்பது தொடர்ந்து காண்போம்.
வைத்தியசாலையில் பழைய நினைவுகளை இழந்த நிலையில் சிகிச்சை பெறுகிறார் நாயகன் சதீஷ். சிகிச்சை பெறும் போது
சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ராவ், ஆனந்தராஜ் என மூன்று கடத்தல்காரர்களையும் விமான நிலைய வளாகத்தில் தந்திரமாக வரவழைக்கிறார். மூவரையும் பொலிசில் சிக்க வைக்க காய் நகர்த்துகிறார். அது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதும் இதன் சுவராசிய பின்னணி என்ன? என்பதும் தான் இப்படத்தின் கதை.
சதீஷ்க்கு ஓபனிங் சாங் வைத்து ஆட வைத்திருக்கிறார்கள். மேஜிக் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால்... புஸ்ஸ். கிளைமாக்ஸில் மேஜிக் ஷோ ஒன்றை வைத்து.. கதையின் டிவிஸ்டுகளை ஹீரோயினுக்கு சொல்வது போல் ஆடியன்ஸ்க்கு டீடெயில்ஸ் கொடுக்கிறார்கள். இது மட்டுமே இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது.
முதல் பாதி காமெடி என்ற பெயரில் சிரிப்பை வரவழைக்க கடுமையாக பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால் அனுபவம் மிக்க ஆனந்தராஜ் மட்டுமே சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார். படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகள் வெற்றி பெற்ற பழைய திரைப்படத்தின் காமெடிகளை நினைவு படுத்துகிறது அதனால் சிரிப்பு வர மறுக்கிறது.
இரண்டாம் பாதியில் கதை விமான நிலைய வளாகத்திலேயே நடைபெறுவதால் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும்... எதிர்பார்த்த இடங்களில் காமெடி இல்லாததால் போரடிக்கிறது. அதிலும் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கைப்பற்றுவதற்காக மூன்று கும்பல்களும் விமான நிலையத்திற்குள் நுழைந்தவுடன் பெரிதாக ஏதாவது நடக்கப் போகிறது என எதிர்பார்க்கும் போது.. இது காமெடி படம் என இயக்குநர் நம் எதிர்பார்ப்பை தூள் தூளாக்குகிறார்.
பூதக்கண்ணாடி எனும் ஊடகத்தில் புலனாய்வு செய்தியாளர் வேடத்தை ஏற்று தனி வழியில் பயணிக்கும் நாயகி சிம்ரன் குப்தாவின் கதாபாத்திரம்... ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தால் அங்கும் இயக்குநர் நம் எதிர்பார்ப்பை துவம்சம் செய்கிறார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக உச்சகட்ட காட்சியில் மேஜிக் ஷோ ஒன்றை வைத்து அதில் நாயகன் சதீஷ் மூலமாக நடந்த நிகழ்வுகளின் சுவாரசியமான பின்னணியை விவரிப்பது சபாஷ் பெறுகிறது.
சதீஷ் என்ட்ரிக்கு மாஸ் பிஜிஎம் கொடுப்பதில் கவனம் செலுத்தியிருக்கும் இசையமைப்பாளர் வி பி ஆர், பாடல்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விமான நிலைய காட்சிகளின் நீளத்தை குறைத்து திரைக்கதையை படத்தொகுப்பாளர் சுவாரசியப்படுத்தி இருக்கலாம். லாஜிக் மீறல்கள் கொஞ்ச நஞ்சமல்ல ஏராளம் ஏராளம்.
சதீஷ் டான்ஸ், ஃபைட் என கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஆனால் சீரியசாக கொண்டு செல்வதா..? காமெடியாக கொண்டு செல்வதா? என்ற குழப்பத்தில் இரண்டையுமே தப்பு தப்பாக செய்து, படத்தை ஏதோ ஏதோ வித்தை செய்து வித்தைக்காரனாக்கி இருக்கிறார்கள்.
வித்தைக்காரன் - 'சொத்தை'க்காரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM