தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக அறிமுகமாகி, இருபதாண்டுகளுக்கு பிறகும் இளமையான தோற்றத்துடன் கல்லூரி மாணவனை போல் இன்றும் தோற்றமளிக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சத்தமின்றி முத்தம் தா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநரும் நடிகருமான 'ஜெயம்' ராஜா அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ராஜ் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சத்தமின்றி முத்தம் தா' எனும் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், நிஹாரிகா, ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜுபின் இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் எக்ஷன் காட்சிகளும், எமோஷனல் காட்சிகளும், புலனாய்வு தொடர்பான காட்சிகளும், விறுவிறுப்பாக இடம்பெற்றிருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM