யோகி பாபுவை இயக்கும் சுரேஷ் சங்கையா

24 Feb, 2024 | 06:13 PM
image

தமிழக கிராமிய மக்களின் மணம் மாறாத படைப்புகளை 'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' ஆகிய படைப்புகளின் மூலம் வழங்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இவரது இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமான யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், படத்தின் தொடக்க விழாவும் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

பட மாளிகைகளுக்கு வருகை தந்து திரைப்படங்களை ரசிக்கும் போக்கு பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக நடுத்தர வர்க்கத்தினரிடையே குறைந்து வருவதால் அவர்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கான தருணங்களைக் கவர்ந்துள்ள டிஜிட்டல் தளங்கள் தங்களுடைய சந்தாதாரர்களுக்கு புதிய படைப்புகளை வழங்குவதில் தீவிர முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. அதில் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான தமிழ் பேசும் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன் புதிய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகளையும் தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரித்து வழங்குகிறது.

பொக்ஸ் ஒபீஸ் ஸ்டூடியோ மற்றும் ஆர். பி. டாக்கீஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் பாஸ்கரன் மற்றும் எஸ். ஆர். ரமேஷ்பாபு தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரச்செல் ரபேக்கா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வி தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பகடித்தனமான நகைச்சுவையுடன் இன்றைய சமூகத்திற்கு தேவையான மெசேஜ் ஒன்றையும் இணைத்து கதையை உருவாக்கி இருக்கிறோம். '' என்றார்.

இயக்குநர் சுரேஷ் சங்கையாவும், யோகி பாபுவும் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35