ஆர்.ராம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் 55ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலோ அல்லது வேறெந்த உத்தியோகபூர்வமான அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரோ இம்முறை செல்லாதென அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கையில் ஏற்பட்டள்ள மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றகரமான விடயங்கள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்கவே விடயங்களை கையாளவுள்ளார்.
குறிப்பாக, இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அவதானிப்பு அறிக்கை மார்ச் மாதம் 4ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனையடுத்து, ஜெனிவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க அந்த வாய்மொழி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக பதிலளிப்பை வழங்கவுள்ளார்.
அத்துடன், பல்வேறுபட்ட பக்கநிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இதேநேரம், அவருக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வெளிவிவகார அமைச்சு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM