15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 17 வயது யுவதி கைது!

24 Feb, 2024 | 05:16 PM
image

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு 15 வயதான சிறுமியை  அழைத்துச் சென்று பாலியல  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விவகாரம்  தொடர்பில் 17 வயது யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான 17 வயது யுவதி  , சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரான யுவதி சிறுமியை ரயில் மூலம் நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் சிறுமி குறித்த யுவதியிடம் கேட்டபோது, இது மசாஜ் நிலையம் என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் மசாஜ் நிலையத்தில் இருந்து திரும்பிய நிலையில் காதலனை சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சிறுமி ஊர் திரும்பி பொலிஸ் நிலையத்துக்கு சென்று மசாஜ் நிலையத்தில் தான் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சிறுமியை  வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் யுவதியைக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41