இலங்கை, கேகாலையைச் சேர்ந்த கலைஞர் கே.எஸ்.பிரபுவின் கன்னி இயக்கத்தில், திறமை ஏ.ஓ.எஸ் (AOS) குழுவினரின் உதவியுடன் வெளிவந்திருக்கும் குறும்படம் நேர் எதிர்.

நேர் எதிர் குறும்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக தடம் பதித்திறார் கலைஞர் கே.எஸ்.பிரபு.

இவர் தனது முதல் படைப்பிலேயே நேர்த்தியான திரைக்கதை, சிறப்பான வசனங்கள், உறுத்தலில்லாத படத்தொகுப்பு என திறமையை முற்றுமுழுதாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

குறும்படத்தின் நடிகர்களை பொறுத்தவரையில் தமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மூன்று கலைஞர்களும் தமக்கிடையே போட்டிபோட்டு தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இதுமாத்திரமின்றி டைட்டில் டிசைனிங், (Title Design) போஸ்டர் டிசைன்  (Poster Design) போன்ற கார்த்தீபனின் பங்களிப்பும் இந்தப் படைப்புக்கு வலுசேர்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்து, இயக்கம் - பிரபு

நடிப்பு - சனாதனன், சஞ்சய் ராஜ், சஞ்சய் 

ஒளிப்பதிவு - மாலங்க,வினோத்

இசை - சஞ்சய் 

உதவி இயக்கம் - கோட்வின்

போஸ்டர் - கார்த்தீபன்

குழு- பிரசாத், ரிப்கான், லோகேஷ், விதூசனன்