நாம் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது பணியாற்றும் அலுவலகத்திலோ அல்லது முதலீடு செய்து தொடங்கி இருக்கும் விற்பனை நிலையத்திலோ...இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சீரான தன வரவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, தடை ஏற்பட்டிருந்தால்... அதனை அகற்றுவதற்கான எளிய பரிகாரத்தையும் எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இவர்கள் நாளாந்தம் காலையில் எழுந்தவுடன் நீராடுவதற்கு முன் தயிரை ( உறைக்குத்திய தயிரை..) முகத்திலும் கை, கால் பகுதிகளிலும் பூசிக்கொண்டு, ஐந்து நிமிடம் முதல் 10 நிமிடம் வரை பொறுமையுடன் காத்திருந்து, பிறகு நீராடினால்... உங்களுடைய ஆராக்களில் உங்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர் நிலையான ஆராக்களின் சக்திகள் அதிகரிக்கும்.
இதன் மூலம் உங்களது முகம் பொலிவு அடைந்து வெகுஜன வசியம் உண்டாகி, நிரந்தர வாடிக்கையாளர்களும்.. புதிய வாடிக்கையாளர்களும்.. வருகை தந்து உங்களது வணிகத்தை விரிவடையச் செய்து, அதனூடாக தன வரவை உண்டாக்குவர்.
மேலும் இத்தகைய தருணங்களில் உங்களுடைய விற்பனை நிலையத்திலும், அலுவலகத்திலும் பணி நேரம் தொடங்குவதற்கும் முன்.. சிறிதளவு நீரில் மஞ்சள் தூள் மற்றும் வாசனை திரவியங்களை கலந்து அதனை அனைத்து மூலைப் பகுதிகளில் தெளிக்க வேண்டும் .
இதன் மூலம் உங்கள் அலுவலகத்தில் அல்லது விற்பனை நிலையத்தில் முகமறியாத தோஷமுள்ள நபர்களால் ஏற்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டிருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும்.
மேலும் உங்களது விற்பனை நிலையத்திலும், அலுவலகத்திலும் மறவாமல் ஒற்றை ஆந்தை, இரட்டைக் கழுதை மற்றும் ஒரே திசை நோக்கி பயணிக்கும் ஏழு குதிரைகள் ஆகிய மூன்று புகைப்படங்களை உங்களது கண்களில் படுமாறு இடம்பெறச் செய்ய வேண்டும்.
இவை உங்களது விற்பனை நிலையத்திலும், அலுவலகத்திலும் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழித்து., நேர் நிலையான ஆற்றலை ஏற்படுத்தி தன வரவை மேம்படுத்தும்.
இந்த மூன்று எளிய பரிகாரங்களையும் தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு வருகை தந்து கொண்டிருந்த சீரான வருவாய் அல்லது தடைபட்ட தன வரவு நீங்கி இயல்பான அளவைவிட கூடுதலான அளவிற்கு தன வரவு வருவதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM