யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

24 Feb, 2024 | 02:29 PM
image

எம்மில் சிலர் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விக்காக அல்லது வளர்ச்சியின்மைக்காக ஜோதிட நிபுணர்களை சந்தித்து பரிகாரத்தை கேட்டிருப்பர். அவர் அனுபவம் உள்ள மூத்த ஜோதிடராக இருந்தால், பரிகாரத்துக்கு கட்டணத்தை வசூலிக்காமல், இந்த ஆலயத்துக்கு சென்று இறை வழிபாட்டை மேற்கொண்டால், நாளடைவில் நிலைமை சீரடையும் என்றும், குறிப்பிட்ட ஆண்டுகள் வரை எந்த ஆலயத்துக்கும் செல்ல வேண்டாம் என்றும், எந்த பரிகாரத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் எடுத்துரைப்பார். 

ஏனெனில், சில லக்னத்துக்கு நவகிரகங்களில் ஒருவர் நல்ல பலன்களை வழங்க கடமைப்பட்டவராகவும், ஒருவர் அசுப பலன்களை வழங்க கடமைப்பட்டவராகவும் இருப்பர். இதனை துல்லியமாக அவதானித்த பிறகுதான், ஜோதிடர்கள் குறிப்பிட்ட லக்னக்காரர்கள் குறிப்பிட்ட திசை நடக்கும் போது ஆலயத்துக்கு சென்று இறைவழிபாட்டை மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதை அறியாமல் அல்லது உணராமல் அல்லது புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்தும் உறுதியாக தவிர்த்தால், அவர்கள் தோல்வியை சந்திப்பதுடன் நாளாந்தம் வாழ்க்கையில் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே கீழ்க்கண்ட லக்னக்காரர்கள் குறிப்பிட்ட திசையில் இறைவழிபாட்டை ஆலயத்துக்கு சென்று மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும்? என்பதனை உங்களது குடும்ப ஜோதிடரிடமும் அல்லது அனுபவிக்க மூத்த ஆன்மிக பெரியோர்களிடமும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

சூரிய திசையில் சனி பகவான் உங்களுக்கான சுப பலன்களை வழங்கும் கிரகமாகவும், சுக்கிர பகவான் உங்களுக்கான அசுப பலன்களை வழங்கும் கிரகமாகவும் திகழ்கிறார்கள்.‌

சந்திர திசையில் சுக்கிர பகவான் உங்களுக்கான சுப பலன்களை வழங்கும் கிரகமாகவும், சூரிய பகவான் உங்களுக்கான அசுப பலன்களை வழங்கும் கிரகமாகவும் திகழ்கிறார்கள். 

செவ்வாய் திசையில் சூரிய பகவான் உங்களுக்கான சுப பலன்களை வழங்கும் கிரகமாகவும், புதன் பகவான் அசுப பலன்களை வழங்கும் கிரகமாகவும் திகழ்கிறார்கள்.

புதன் திசையில் சந்திர பகவான் உங்களுக்கான சுப பலன்களை வழங்கும் கிரகமாகவும், செவ்வாய் பகவான் உங்களுக்கான அசுப பலன்களை வழங்கும் கிரகமாகவும் திகழ்கிறார்கள்.

குரு திசையில் சனி பகவான் உங்களுக்கான சுப பலன்களை வழங்கும் கிரகமாகவும், சூரிய பகவான்‌ உங்களுக்கான அசுப பலன்களை வழங்கும் கிரகமாகவும் திகழ்கிறார்கள்.

சுக்கிர திசையில் புதன் பகவான் உங்களுக்கான சுப பலன்களை வழங்கும் கிரகமாகவும், சனி பகவான்  உங்களுக்கான அசுப பலன்களை வழங்கும் கிரகமாகவும் திகழ்கிறார்கள்.

சனி திசையில் சுக்கிர பகவான் உங்களுக்கான சுப பலன்களை வழங்கும் கிரகமாகவும், செவ்வாய் பகவான் உங்களுக்கான அசுப பலன்களை வழங்கும் கிரகமாகவும் திகழ்கிறார்கள்.

அதனால் உங்களுக்கு எந்த திசை நடக்கிறது என்பதனை ஜோதிடர்கள் மூலம் தெரிந்து கொண்டு உங்களுக்கு சுப பலன்களை வழங்கும் கிரகத்தை தெரிந்துகொண்டு அந்த கிரகத்தின் அதிதேவதை அந்த கிரகத்தின் உணவுகள் அந்த கிரகத்தின் பிரத்யேக வழிபாட்டு முறைகளை முழுமையான மனதுடன் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

அதே தருணத்தில் உங்களுடைய லக்னத்துக்கு நல்ல பலன்களை கிரகங்கள் தர வேண்டும் என்றால் அவை உங்களது ஜாதகத்தில் 6, 8, 12ஆம் இடத்தில் மறைய கூடாது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் இதன்போது ஜோதிட நிபுணர்கள் வலியுறுத்தும் வாழ்வியல் பரிகாரத்தையும், டிஎன்ஏ பரிகாரத்தையும், ஆலய வழிபாட்டு பரிகாரத்தையும் தொடர்ந்து செய்து வந்தால், எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும்.

உடனே எம்மில் சிலர் எமக்கு ராகு திசை நடைபெறுகிறது என்றும் வேறு சிலர் கேது திசை நடைபெறுகிறது என்றும் குறிப்பிடுவர். இதற்கான சுப கிரகம் மற்றும் அசுப கிரகங்களை குறிப்பிடவில்லையே என நினைத்துக்கொள்வர். இவை பற்றிய விரிவான கட்டுரைகள் விரைவில் வெளியாகும்.‌

இந்நிலையில் குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட திசை நடக்கும்போது ஆலயத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் குறிப்பிட்டார்கள் அல்லவா..! அதற்கான பட்டியலை கீழே காண்போம்.

மேஷ லக்னம், கடக லக்னம், விருச்சிக லக்னம் ஆகிய மூன்று லக்னத்தில் பிறந்தவர்கள் கோவிலுக்கு செல்வதால் தோஷமில்லை.

ரிஷப லக்னத்திலும், மிதுன லக்னத்திலும் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை நடக்கும் போது எந்த ஆலயங்களுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த திசையில் ஆலயங்களுக்கு சென்றால், உங்கள் முன்னேற்றம் தடைபடும். குறிப்பாக சனி பகவான் அருள் பாலிக்கும் திருநள்ளாறு ஸ்தலத்திற்கு செல்வதை அறவே தவிர்த்து விட வேண்டும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் புதன் திசை நடக்கும் போது ஆலய வழிபாட்டு பரிகாரங்களை மேற்கொண்டாலும், பரிகார ஆலயத்திற்கு சென்றாலும் முன்னேற்றம் என்பது இருக்காது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலைக்கு சென்று வந்தால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திப்பார்கள்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் சூரிய திசை நடக்கும் போது எந்த ஆலயங்களுக்கும் சென்று இறைவனை வழிபடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும். இதனால் உங்களது முன்னேற்றமும், வளர்ச்சியும் தடைபடும். பூலோக வைகுண்டம் என வழங்கப்படும் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாத பெருமாள் தரிசித்தால் சொல்ல இயலாத துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்.

துலா லக்னத்தில் பிறந்தவர்கள் சூரிய திசை நடக்கும் போது கோவில்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் விஷ்ணு பகவான் ஆலயத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் குரு திசையின் போது ஆலய வழிபாட்டையும், ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக  சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது தோல்வியைத் தரும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் திசையின் போது இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் எந்த ஆலயத்திற்கும் செல்லக்கூடாது. குறிப்பாக பெருமாள் ஆலயத்திற்கு செல்லக்கூடாது.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் சூரிய திசையின் போது ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது. இவர்களும் ஸ்ரீரங்கம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் புதன் திசையின் போது கோயிலுக்குச் சென்று ஆண்டவனை பிரார்த்திக்க கூடாது. குறிப்பாக பழனி மலைக்கு சென்றால் தோல்வியை எதிர்கொள்ள நேரிடும்.

தகவல் : சுப்ரமணியன்

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் திருமுல்லைவாயில்...

2024-04-18 17:30:19
news-image

தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருள் பாலிக்கும்...

2024-04-17 17:44:50
news-image

யோகங்களை அருளும் யோகி தலங்கள் மற்றும்...

2024-04-16 14:24:26
news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11