தற்காலத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாப்பது என்பது இளம் தாய்மார்களுக்கு சவாலான பணியாக இருக்கிறது.
பிள்ளைகள் பிறந்து முதல் மூன்று மாத காலத்திலிருந்து ஆறு மாத காலத்துக்குள் சில மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து அழும். அதன் அழுகையை நிறுத்துவதற்கு என்ன செய்வதென்றே தெரியாது. இதனால் பெற்றோர்கள் குறிப்பாக பெண்மணிகள் தவிப்பதுண்டு.
இந்த தருணத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மூன்று மாத காலத்திலிருந்து ஆறு மாத காலகட்டத்துக்குள் நாளாந்தம் மூன்று மணித்தியாலங்களுக்கு குறைவில்லாமல் காலை வேளையிலோ அல்லது மாலை வேளையிலோ அழுதால், உங்களது பிள்ளை 'கோலிக்' எனும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கக்கூடும்.
தற்போது மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கான முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என்றும், மேலும் இது தொடர்பாக பெற்றோர்கள் முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆரோக்கியமாக பிறந்த குழந்தைகள் நாளாந்தம் அதிக நேரம் அல்லது தீவிரமாக அழுதால், 'கோலிக்' எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என கருதலாம்.
குழந்தை தொடர்ந்து அழுவதால் பெற்றோர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. பொதுவாக குழந்தைகளின் இத்தகைய அழுகை, பிறந்து நான்கு மாதங்களுக்கு பிறகு தானாகவே குறைந்துவிடும். சில குழந்தைகளுக்கு மட்டும் இந்த அழுகை ஆறு மாத காலம் வரை நீடிக்கக்கூடும்.
குழந்தை வீறிட்டு அழுவது அதற்கு ஏற்பட்டிருக்கும் வலியின் அறிகுறியாக இருக்கலாம். சில தருணங்களில் காரணங்களின்றி குழந்தைகள் அழத் தொடங்கும். சில தருணங்களில் பசியை வெளிப்படுத்தவும் குழந்தைகள் அழும். சில குழந்தைகளுக்கு அழும்போது அவர்களின் தோல் சிவந்துவிடும். முகத்தில் மாற்றம் ஏற்படும். கை, கால்களில் கூட சிறிய அளவில் பதற்றத்தைக் காணலாம். சில தருணங்களில் அழும்போது குழந்தை அறியாமல் உள்ளிழுக்கும் காற்றின் காரணமாகவும், உடலில் வாயு ஏற்பட்டு அது பிரியாததன் காரணமாகவும் அழும்.
குழந்தைகள் இது போன்று தொடர்ந்து தீவிரமாக அழுதால், அவற்றின் வயிற்றுப் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் செரிமான மண்டல அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றும், செரிமான மண்டலத்தில் செரிமானத்துக்கு பங்களிக்கும் ஆரோக்கியமான பக்டீரியாக்களின் எண்ணிக்கையில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும், உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களாலும், அதிகப்படியான உணவு அல்லது தேவைக்கு குறைவான உணவின் காரணமாகவும் குழந்தைக்கு கோலிக் பாதிப்பு ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு மட்டுமே இது பாரம்பரிய மரபணுவின் காரணமாக ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
இதன்போது குழந்தையை சமாதானப்படுத்த அல்லது அதன் அழுகையை நிறுத்த மருத்துவர்கள் அமைதியான சுற்றுப்புற சூழலில் குழந்தையை பிரத்தியேக இருக்கையில் அமர வைத்து, நடைபயிற்சி அழைத்துச் செல்வது... குழந்தை மீது ஒரு போர்வையை சுற்றி வைப்பது... குழந்தையை இளஞ்சூடான நீரில் குளிக்க வைப்பது... குழந்தையின் வயிற்றுப் பகுதியையும், முதுகுத்தண்டு பகுதியையும் மென்மையாகவும் மருத்துவரின் அறிவுரைப்படியும் நீவிவிடுவது... போன்ற நிவாரண முதலுதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
குழந்தையின் கவனத்தை திருப்புவதற்கான பிரத்யேக முயற்சியினை மேற்கொண்டு, கோலிக் பாதிப்பிலிருந்து விடுபடச் செய்யலாம். சில குழந்தைகளுக்கு மட்டும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- டொக்டர் ஸ்ரீதேவி
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM