வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்

Published By: Vishnu

24 Feb, 2024 | 12:29 AM
image

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியடி பகுதியில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தவளைச் சம்பவ இடத்திற்கு மருதங்கேணி பொலிசார் சீருடையிலும்  சிவில் உடையில் வந்திருந்தனர்.

சம்பவம் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு  ஊடகவியலாளரைச் செய்தி சேகரிக்க விடாது சிவில் உடையில் வந்த பொலிசார் தடுத்தது நிறுத்தி அவரது தொலைபேசியையும் பறித்து அதில் பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளதுடன் அவரது ஊடக அட்டை,  மோட்டார்சைக்கிள் பத்திரங்கள் பறிமுதல் செய்து சிறிது நேரத்தில்  மீண்டும் ஒப்படைத்துள்ளதுடன் அவர் கடுமையாக  மிரட்டப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளரை பணி செய்ய விடாது தடுத்து அச்சுறுத்திய பொலிசார் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சிவில் உடையில் வந்த பொலிசார் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34