சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ ரூட் ; அறிமுக வீரர் தீப் அபாரம், அஷ்வின் மைல்கல் சாதனை

Published By: Vishnu

23 Feb, 2024 | 10:25 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தோடரில் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரஞ்சி விளையாட்டரங்கில் நான்காவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்ட இங்கிலாந்து, முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட்டின் அற்புதமான சதத்தின் உதவியுடன் சிறந்த நிலையை அடைந்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆகாஷ் தீப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் ஆசி பெறுவதைப் படத்தில் காணலாம்.

இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய ஜோ ரூட் இந்தப் போட்டியில் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி தனது 31ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

அதேவேளை, இந்த டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு வழங்கப்பட்ட ஜஸ்ப்ரிட் பும்ராவுக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற அறிமுக வீரர் ஆகாஷ் தீப் எதிரணியின் முதல் 3 வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்து அணியினரின் பாராட்டைப் பெற்றார். ஆனால், அதன் பின்னர் அவரால் சாதிக்க முடியாமல் போனது.

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

ஜொனி பெயாஸ்டோவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 100 வீக்கெட்களை வீழ்த்திய முதலாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் நிலைநாட்டினார்.

ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட் (11) ஆகிய இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் ஆகாஷ் தீப்பினால் வீழ்த்தப்பட்டன.

மூன்றாவதாக ஆட்டம் இழந்த ஸக் க்ரோவ்லி 42 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையெ ஒலி போப் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் ஜோ ரூட், ஜொனி பெயாஸ்டோ ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஜொனி பெயாஸ்டோ (38), அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (3) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (112 - 5 விக்.)

இதன் காரணமாக இந்திய அணியினர் பூரிப்பில் மிதந்தனர்.

ஆனால், ஜோ ரூட், பென் ஃபோக்ஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 113 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

பென் ஃபோக்ஸ் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 126 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து களம் நுழைந்த டொம் ஹாட்லி 13 ஓட்டங்களுடன் வெளியேற இங்கிலாந்து மீண்டும் ஆட்டம் கண்டது.

photo akash   deep getting family blessings 

ஆனால், ஜோ ரூட், ஒலி ரொபின்சன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

ஜோ ரூட் 226 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள் உட்பட 106 ஓட்டங்களுடனும் ஒலி ரொபின்சன் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிஸ் ஒலிம்பிக் : குறுந்தூர ஓட்டங்களில்...

2024-04-23 12:28:48
news-image

புளோரிடாவில் திறந்தவெளி நீச்சலில் டிலன்க ஷெஹான்...

2024-04-23 12:29:46
news-image

வரலாறு படைத்துவரும் டுப்லான்டிஸின் உலக சாதனை...

2024-04-23 12:18:34
news-image

மும்பை இண்டியன்ஸை எதிர்த்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2024-04-23 02:27:37
news-image

ஐபிஎல்லில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல்...

2024-04-22 23:34:30
news-image

பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர்...

2024-04-22 20:13:21
news-image

சப்மனின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து ...

2024-04-22 17:07:36
news-image

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் வலை பந்துவீச்சாளராக...

2024-04-22 15:38:44
news-image

குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட போட்டியில்...

2024-04-22 01:19:28
news-image

பரபரப்பான போட்டியில் பெங்களூருவை கடைசிப் பந்தில்...

2024-04-21 21:19:55
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2024-04-21 15:13:32
news-image

பவர் ப்ளேயில் சாதனை படைத்து நடராஜனின்...

2024-04-21 06:23:36