வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசுகட்சி ; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன்

Published By: Vishnu

23 Feb, 2024 | 07:40 PM
image

ஆர்.ராம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. 

குறித்த குழுவின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ்நிர்மலநாதன், வைத்தியர்.ப.சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேயர் தி.சரவணபவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  குறித்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எழுவரும் வழக்கை நீதிமன்றத்தின் ஊடாக கையாள்வது தொடர்பாக, பொதுநிலைப்பாடொன்றை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இதேநேரம், தெரிவு செய்யப்பட்டுள்ள தலைவர் சிவஞானம் சிறீதரன், தனது தலைமைப்பதவி உட்பட அனைத்துப் பதவிகளையும் மீளவும் தெரிவு செய்வதற்கு தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை கையாளல், மற்றும் அடுத்தகட்ட செயற்பாடுகள் சம்பந்தமாகக் கலந்துரையாடுவதற்காகக் கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் அறிவகம் அலுவலகத்தில் நேற்றையதினம் விசேட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில் முதலில் மாவை.சோ.சேனாதிராஜா உரையாற்றினார். அவர், கட்சியின் தலைமைத்தெரிவு உட்பட பல்வேறு விடயங்களில் தான் கூறிய எதனையும் கேட்காது அங்கத்தவர்கள் நடந்துகொண்டுள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி தனது ஆதங்கங்களை வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி, கடந்த ஜனவரி 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற விடயங்களை மீளவும் கதைத்து பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அரியநேத்திரன், எழுந்து, நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைக் கட்சியில் அங்கத்தவர்கள் கேட்கவில்லை என்றால், அந்த விடயங்கள் என்ன? அதனை யார் செவிமடுக்கவில்லை என்பதை வெளிப்படுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தார். எனினும், கடந்தகால விடயங்களை மீண்டும் கலந்துரையாடுவதால் வீணாக நேரமே செலவழியும் என்றுரைத்ததோடு, அந்த விடயம் அப்படியே கைவிடப்பட்டது.

தொடர்ச்சியாக, சிவஞானம் சிறீதரன் உரையாற்றினார். அவர் தனது தலைமைத்தெரிவு உட்பட ஏனைய அனைத்து தெரிவுகளையும் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், விசேடமாக மூலக்கிளைகளிலிருந்து தெரிவுகள் அனைத்தும் மீண்டும் நடைபெறவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இவரைத்தொடர்ந்து, வைத்தியர் சத்தியலிங்கம், சாள்ஸ் நிர்லநாதன் உள்ளிட்டவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். 

இந்த நிலையில், கட்சியின் புதிய தெரிவுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கானது தனியே எழு பேருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்காக பார்க்கக்கூடாது அது அதுகட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும்.

ஆகவே கட்சியே இந்த விடயத்தில் அதினளவான கவனத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் பிரதிவாதிகள் தமது நிலைப்பாடுகளை ஏகோபித்து அறிவிக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்

குறிப்பாக, திருகோணமலை வழக்கினை கையாள்வது குறித்து விசேடமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ள எழுவரும் முடிவொன்றினை எடுத்து அறிவிக்கும் பட்சத்திலேயே தான் அடுத்த கட்டம் நோக்கி நகரமுடியும் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

இதனையடுத்து வழக்குத் தொடுநர்களுடன் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், சமயத்தலைவர்கள், ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் சாள்ஸ் நிர்மலநாதன், வைத்தியர்.சத்தியலிங்கம், சரவணபவன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வழக்குத்தொடுநர்கள் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்காது விட்டால் நீதிமன்றத்தின் ஊடாகவே விடயங்களை கையாள்வதென்றும் அந்த விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவே முன்னெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம், வைத்தியர் சிவமோகன், ஞானமுத்து ஸ்ரீநேசன் தான் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை மீளவும் மாற்றிக் கொண்டிருக்காது விட்டால் இந்த நிலைமைகள் ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்டார். 

எனினும், முடிந்த விடயங்களை மீளப்பேசுவதால் பயனில்லை என்று தெரிவிக்கப்பட்டு அவ்விடயம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதேநேரம், ஏனைய விடயங்கள் சம்பந்தமாக உத்தியோகப் பூர்வமாக மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்படுகின்றபோது அதில் விடயங்களை ஆராயுமாறு குறிப்பிட்டு கூட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41