தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இயக்கத்தின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைலரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் இராகவன் அல்லது ஆர்.ஆர் (வேலாயுதம் நல்லநாதர்) வியாழக்கிமை (22) இயற்கை எய்தினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இணந்திருந்து - தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை முழுமையாக அர்ப்பணித்த ஒரு மூத்த போராளியே ஆர்.ஆர் ஆவார்.
ஆர்.ஆர். இன் வித்துடலுக்கான வணக்க நிகழ்வுகள் -16 ஹேக் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சனிக்கிழமை (24) காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து, வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8 மணி தொடக்கமும் நடைபெறும்.
பின்னர், முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்விகள் நடைபெற்று ஆர்.ஆர். இன் வித்துடல் வவுனியா கோவில்குளத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM