புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம் 

23 Feb, 2024 | 06:12 PM
image

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது.

இன்றளவில் நியூசிலாந்து வட அமெரிக்கா வரையில் இலங்கை உலகின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.  

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களுக்கான நிதியம், அலுவலகம், அலுவலகச் சட்டமூலம் உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.  

அதற்கமைய வெளிநாடு வாழ். இலங்கையர்களுக்கான அலுவலகம் கடந்த வருடத்தின் இறுதியில் கொழும்பு பழைய சார்டட் கட்டடத்தில் அமைச்சரவை அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையர்கள் இதுவரையில் 5 அலையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2.5 - 3 மில்லியன் வரையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பதாக அண்ணளவாக கணக்கிட்டுள்ளோம். அவர்களில் 1.6 மில்லியன் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர்.  

தொழிலாளர்கள் பதிவு செய்துவிட்டு செல்வதால் அவர்களுடைய தகவல்கள் எம்மிடத்தில் உள்ளன. ஏனைய காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சரியான வகையில் இல்லை. ஆனால், விரைவில் மற்றைய தூதரங்களைத் தொடர்பு கொண்டு இவர்கள் பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க முயற்சிக்கிறோம்.

அதற்காக அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் சில அடிப்படை தகவல்களை மாத்திரம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.  

இந்த தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதோடு, இந்த அலுவலகம் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களையும் தாயகத்தையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக செயற்படும் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49