ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர் றக்பியில் 16 பாடசாலை அணிகள் - மொத்த பணப்பரிசு 25 இலட்சம் ரூபா

23 Feb, 2024 | 05:57 PM
image

(நெவில் அன்தனி)

றக்பி விளையாட்டை எமது பாடசாலையில் மட்டுமன்றி சகல பாடசாலைகளிலும் முன்னேற்றுவது பற்றி சிந்தித்து செயற்படுவதாக ஸாஹிரா கல்லூரி அதிபர் ட்ரிஸ்வி மரிக்கார் தெரிவித்தார்.

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர் போட்டி தொடர்பாக கல்லூரியின் கபூர் மண்டபத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பின் ஆரம்பத்தில் கண்கவர் ஸாஹிரா றக்பி நூற்றாண்டு கிண்ணத்தை கல்லூரி அதிபர், போட்டி ஏற்பாட்டுக் குழுப் பணிப்பாளர் ஷாபிர் காதர் ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்துவைத்தனர்.

அங்கு தொடர்ந்து பேசிய கல்லூரி அதிபர், 'எமது கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர் சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அணிகளில் தோற்றவர்கள் இருக்கமாட்டார்கள். மாறாக அனைத்து அணியினரும் சம்பியன்களாக இருப்பர். மேலும் நல்லுறவு, மனிதாபிமான மதிப்புகள் ஆகியவற்றை பேணும் வகையில் இந்த றக்பி சுற்றுப் போட்டி உயரிய நிலையில் அரங்கேற்றப்படும். பங்குபற்றும் சகல அணிகளுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படும்' எனக் குறிப்பிட்டார்.

இலங்கையில் றக்பி விளையாட்டை முதலில் ஆரம்பித்த நான்கு பாடசாலைகளில் ஸாஹிராவும் ஒன்றாகும். கண்டி திரித்துவம், றோயல், கண்டி கிங்ஸ்வூட் ஆகிய கல்லூரிகளைத் தொடர்ந்து ஸாஹிராவில் றக்பி 1924இல் அறிமுகமானது.

எனவே இந்த ஆண்டு ஸாஹிரா றக்பியில் மறக்க முடியாத ஆண்டாக அமையவுள்ளது.

ஸாஹிரா றக்பி நூறறாண்டு விழாவை முன்னிட்டு 16 பாடசாலைகள் பங்குபற்றும் அணிக்கு எழுவர் றக்பி போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் எதிர்வரும் மார்ச் 2ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியை விட அனைத்துப் பாடசாலைகளிலும் றக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்களை ஸாஹிரா றக்பி நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக் குழுவினர் நடத்தவுள்ளனர்.

அணிக்கு எழுவர் றக்பி போட்டியில் ஏ குழுவில் ஸாஹிரா, தர்மராஜ, பரி. தோமா, காலி புனித அலோசியஸ் ஆகிய கல்லூரிகளும்

பி குழுவில் றோயல், ஸ்ரீசுமங்கல, புனித பேதுருவானவர், லும்பிணி ஆகிய கல்லூரிகளும்

சி குழுவில் திரித்துவம், டி.எஸ். செனாநாயக்க, வெஸ்லி, குருநாகல் மலியதேவ ஆகிய கல்லூரிகளும்

டி குழுவில் கிங்ஸ்வூட், இஸிபத்தன, புனித சூசையப்பர், மஹாநாம ஆகிய கல்லூரிகளும் பங்குபற்றுகின்றன.

இந்த சுற்றுப் போட்டிக்கு முழு ஆடைப்பால் உற்பத்தி நிறுவனமான டயமண்ட் பிரதான அனுசரணை வழங்குகிறது.

இந்த சுற்றுப் போட்டிக்கு 25 இலட்சம் ரூபாவை மொத்த பணப்பரிசாக வழங்குவதாக டயமண்ட் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அலி தெரிவித்தார்.

இதற்கு அமைய சம்பியனாகும் அணிக்கு ஸாஹிரா றக்பி நூற்றாண்டு கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.

மூன்றாம், நான்காம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே 2 இலட்சம் ரூபாவும் ஒரு இலட்சம் ரூபாவும் பணப்பரிசு வழங்க்பபடும்.

இதனைவிட கோப்பை, குவளை, கேடயப் பிரிவுகளில் முதலிரண்டு இடங்களைப் பெறும் 6 அணிகளுக்கு தலா 50,000 ரூபாவும் தோல்வி அடையும் 6 அணிகளுக்கு தலா 25,000 ரூபாவும் அதிசிறந்த வீரருக்கு 50,000 ரூபாவும் அதிக ட்ரைகளை வைக்கும் வீரருக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படும்.

அதிசிறந்த வீரருக்கு ஸ்லிங் மொபிலிட்டி நிறுவனத்தினால் மின்சார ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படும்.

இந்த சுற்றுப் போட்டியை ஆசிய றக்பி சங்கம், ஸ்ரீலங்கா றக்பி றிறுவனம், இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஸாஹிரா றக்பி நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக் குழு நடத்துகிறது.

இப் போட்டிக்கு மூஸ் குளோதிங், ரைட் அனேர்ஜி ட்ரின்க், தாச குறூப், GNZ பயோ சயன்ஸ், ஃப்ரொஸ்டி, அமெரக்கன் வோட்டர் ஆகிய றிறுவனங்களும் அனுசரணை வழங்குகின்றன.

photos 6, 7, 8, 9, 10.

(படப்பிடிப்பு: எம். எஸ். சலீம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணம் கல்லூரிக்கு 3ஆம் இடம்

2024-11-07 13:27:48
news-image

பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட்...

2024-11-07 12:46:58
news-image

நியூஸிலாந்துக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட...

2024-11-06 16:25:57
news-image

சகல பிரிவுகளிலும் கால் இறுதிகளில் நடப்பு...

2024-11-06 03:25:24
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட்டில் சம்பியனான...

2024-11-05 15:47:46
news-image

நியூஸிலாந்து அணியின் ஒரு தொகுதியினர் இலங்கை...

2024-11-05 15:22:23
news-image

மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வலுவான...

2024-11-04 21:33:19
news-image

பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்;...

2024-11-04 18:17:29
news-image

இந்தியாவை நியூஸிலாந்து முழுமையாக வெற்றிகொண்டதை அடுத்து...

2024-11-04 15:18:09
news-image

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள்...

2024-11-04 13:52:25
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட்டில் தோல்வி...

2024-11-03 17:18:59
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக...

2024-11-03 13:45:47