இலங்கை மிகப்பெரும் அரசியல் சர்வதேச அரசியல் அபிலாசைகளை கொண்டிருக்கவில்லை ; அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபட விரும்புகிறது - இந்திய ஊடகத்துக்கு தாரக பாலசூரிய கருத்து

Published By: Rajeeban

23 Feb, 2024 | 05:45 PM
image

இலங்கை மிகப்பெரிய அரசியல், சர்வதேச அரசியல் அபிலாசைகளை கொண்டிருக்கவில்லை நாங்கள் அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபடவிரும்புகின்றோம் இலங்கை மக்கள் அதன் மூலம் பயனடைவார்கள் என இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் wionஅவர் இதனை தெரிவித்துள்ளார்.

கேள்வி

இலங்கை இந்திய உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள் குறிப்பாக நிதிசார் இணைந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் உங்கள் நாட்டில் யுபிஐ ஆரம்பித்து வைக்கப்பட்டதை நாங்கள் பார்த்தோம்.

பதில்- இந்திய உறவுகள் முன்னர் ஒருபோதும் இல்லா வலுவான உயர்ந்த நிலையில் காணப்படுவதாக நான் கருதுகின்றேன்.யுபிஐ இரு நாடுகளிற்கும் நன்மையளிக்கின்ற விடயம்.

இலங்கையி;ல் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்களை பார்த்தால் அவை நிதிநெருக்கடியாக டொலர் இல்லாததால் உருவாகியது.

இதன் காரணமாக நாங்கள் டொலரில் தங்கியிருப்பதை குறைக்கவேண்டியுள்ளது.

எங்களின் மிகப்பெரிய சுற்றுலா சந்தை இந்தியாவே நாங்கள் இந்தியாவிடமிருந்து சுற்றுலாப்பயணிகள் மூலம் கிடைக்ககூடிய வருமானத்தை பெற்றால் நாங்கள் இந்தியாவிலிருந்து 5.5 பில்லியன் டொலருக்கு பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்  நாங்கள் அந்த இந்திய நாணயத்தை இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்கு பயன்படுத்தினால் டொலரில் தங்கியிருப்பதை குறைக்க முடியும்.

இந்தியர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இலகுவானதாக நெகிழ்ச்சி தன்மை மிக்கதாக மாறும் அவர்கள் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம்.

கேள்வி- இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்? இந்தியர்களிற்கான சுற்றுலாத்தலம் இலங்கை என்ற அந்தகருத்தினை எவ்வாறு கருதுகின்றீர்கள்?

பதில்- நீங்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளீர்களா?

செய்தியாளர் – நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன் ஆனால் அது ஒரு அதிஸ்டமில்லாத தருணத்தில் -உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்

தாரக- உங்களின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தது மிகவும் சரியான விடயம் இலங்கை 65000 சதுரகிலோமீற்றர் அளவிலான ஒரு நாடு ஆனால் அங்கு அனைவருக்கும் அனைத்தும் உள்ளது.

அதன்அளவில் அடிப்படையில் இலங்கையே சிறந்த தீவு என மார்க்கபொலொஸ் தெரிவித்தது ஆச்சரியமளிக்கும் விடயமில்லை.

உலகின் மிகச்சிறந்த கடற்கரைகள் எங்கள் நாட்டில் உள்ளன மிகவும் குளிர்ந்த காலநிலையை உடைய மலையகப்பகுதிகள் உள்ளன வனவிலங்குகள் வனவிலங்கு பூங்காக்கள் உள்ளன –உலகிலேய அதிக சிறுத்தைகள் யாலதேசிய பூங்காவிலேயே காணப்படுகின்றன.

நாங்கள் இராமயணத்தை அடிப்படையாக வைத்து சுற்றுலாத்துறையை உருவாக்க முயல்கின்றோம் 

நான் அனைத்து இந்தியர்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கின்றேன் அது மிகவும் சிறந்த அனுபவமாக அமையும்.

கேள்வி- இந்திய இலங்கை உறவுகள் என வரும் போது சீனா இலங்கை உறவுகள் என்ற விடயமும் உள்ளது  இது உறவுகளை சமநிலைப்படுத்தும் முயற்சியா அல்லது இந்தியா உண்மையாகவே உங்களுடைய இயல்பான சகாவா?

பதில்-இயல்பான சகா என தெரிவிக்கும்போது அது ஏனைய நாடுகள் எங்கள் எதிரிகள் அல்லது அதனை போன்றவை என தெரிவிப்பதாக அமையும்.

ஆனால் அப்படியில்லை .

இந்தியாவும் சீனாவும் நண்பர்கள்- ஆனால் இந்தியாவின் உறவு என்பது நாகரீக உறவு நீங்கள் நூல்களை வாசித்தீர்கள் என்றால் இலங்கை மக்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் இலங்கை ஒரு பௌத்த நாடு பௌத்தம் இந்தியாவிலிருந்தே வந்தது.

சீனா ஒரு வர்த்தக சகா ஏனைய நாடுகளும் அவ்வாறனவையே 

எங்களின் ஏற்றுமதிகளை பார்த்தீர்கள் என்றால் அவை அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் செல்கின்றன .இந்த நாடுகளும் மிக முக்கியமான வர்த்தக சகாக்கள் .

இந்தியா சீனாவுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் அளவை பார்த்தால் நாங்கள் சீனாவுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் அளவு மிகவும் சிறியது .

இலங்கை மிகப்பெரிய அரசியல் சர்வதேச அரசியல் அபிலாசைகளை கொண்டிருக்கவில்லை நாங்கள் அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபடவிரும்புகின்றோம் இலங்கை மக்கள் அதன் மூலம் பயனடைவார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47