எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடிக்கும் 'ஜோஷ்வா இமைப்போல் காக்க' படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
கௌதம் வாசுதேவ் மேனன் - தமிழ் திரையுலகில் காதலை சொல்வதாக இருந்தாலும்... எக்சன் காட்சிகளாக இருந்தாலும். அவருடைய ஸ்டைலீஷான மேக்கிங் ரசிகர்களிடத்தில் பிரபலம். இதன் காரணமாகவே இவரது இயக்கத்தில் உருவாகி வெளியாகும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கிறது. 'வெந்து தணிந்தது காடு' என்ற படம் வெளியான பிறகு ஓராண்டு கழித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் 'ஜோஷ்வா இமைப்போல் காக்க'. இதில் வருண், ராஹீ, கிருஷ்ணா யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ. ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் வருண், தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் பங்கு பற்றினர்.
இதன் போது தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், '' கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை நான் விரும்பி பார்ப்பதுண்டு. வருணை அவரிடம் அறிமுகப்படுத்திய போது.., 'சொக்லேட் பாயாக இருக்கிறார். அதனால் காதல் கதை ஒன்றில் நடிக்க வைக்கலாம்' என்றார். பிறகு, 'ஒரு எக்ஸ்பிரிமெண்டல் முயற்சியை வருணை வைத்து செய்தால். சிறப்பாக வரும் என நம்புகிறேன்' என்றார். அப்போது அவரிடம், 'வருணை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். அவனை ஒரு நட்சத்திர நடிகர் எனும் உயரத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்' என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்தேன். அதன் பிறகு 'ஜோஷ்வா இமைப்போல் காக்க' படத்தின் கதையை சொன்னார். அத்துடன் ஹொலிவுட் சண்டை பயிற்சி கலைஞரான யானிக் பென்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
அதற்கும் சம்மதம் தெரிவித்தேன். தற்போது இந்த படத்தை பார்த்தேன். படம் ஹொலிவுட் படம் போல் உருவாகி இருக்கிறது. படத்தில் பத்து சண்டை காட்சிகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைந்திருக்கிறது. நடிகர் கிருஷ்ணா இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் காதலும் இருக்கிறது. எக்சனும் இருக்கிறது. கொமர்ஷலாகவும் இருக்கிறது. இப்போதைய இளைய தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். கடந்த மாதம் வெளியிட்ட 'சிங்கப்பூர் சலூன்' எங்கள் நிறுவனத்திற்கு சிறிய அளவில் லாபத்தை பெற்று தந்தது. அதேபோல் இந்த மாதம் வெளியாகும் 'ஜோஷ்வா இமைப்போல் காக்க' படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, லாபத்தை தரும் என நம்புகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM