இயக்குநர்- வசனகர்த்தா -நடிகர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் விஜய்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் எலக்சன்' எனும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'எலக்சன்'. இதில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' வட தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடைபெறும் தில்லுமுல்லுகள், குளறுபடிகள், ஆதரவாளர்கள், பிரச்சாரம், வாக்காளர் அன்பளிப்பு.. என ஒவ்வொரு விடயத்திலும் இன்றைய திகதியில் நடைபெறும் பல அசலான சம்பவங்களை நுட்பமாக திரைக்கதையில் பதிவு செய்திருக்கிறோம்.
அத்துடன் ஒரு திரைப்படத்திற்குரிய அனைத்து வணிக அம்சங்களையும் சாதுரியமாக இணைத்திருக்கிறோம். இந்த படம் வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டியது அவசியத்தையும், தேர்தல் அரசியல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM