நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

23 Feb, 2024 | 03:56 PM
image

இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைப்பதை விட புத்திசாலித்தனமாக உழைப்பதுதான் சரியான வழி. புத்திசாலித்தனம் என்றவுடன் உங்களுடைய ஜாதகத்தில் புதன் பகவான் வலிமை பெற்றிருந்தாலோ அல்லது ஆதிக்கம் பெற்றிருந்தாலோ தான் உங்களால் சாமர்த்தியசாலிகளாகவும், சமயோஜிதமாகவும் யோசித்து, அதனை புத்திசாலித்தனத்துடன் செயற்படுத்தி வெற்றி காண முடியும். 

மேலும், புத்திசாலித்தனம் இருந்தாலும், அது செயற்படுமா, செயற்படாதா என்பதை அவதானிக்க, எம்முடைய ஆன்மிகப் பெரியோர்கள் காலக்கணிதம் என்ற ஒரு முறையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். 

காலக்கணிதம் என்றால் காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட ஆரம் போல் உத்தராயணம் - தட்சிணாயணம் என இயங்கும் சூரிய பகவானின் இயக்கத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இதனைப் பின்பற்றி எம்முடைய சோதிட நிபுணர்கள் நீங்கள் எந்த திசையில் பிறந்தாலும், காலப்பகை என்றொரு அம்சம் இருப்பதை மறந்துவிடக்கூடாது என்றும் நவகிரகங்களில் ஒருவருடைய திசை நடக்கும் போது சுப பலன்களை வழங்க ஒரு கிரகம் கடமைப்பட்டவர் என்றாலும், அசுப பலன்களை வழங்கவும் ஒரு கிரகம் கடமைப்பட்டவர் என்றாலும், காலப்பகை என்ற நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஏனெனில், காலப்பகை நடக்கும் காலகட்டத்தில் உங்களுடைய வீட்டில் ஒரு குழந்தை பிறந்திருந்தால் அல்லது அதனுடைய வளர்ச்சியின்போது காலக்கணித முறைப்படி கிரகங்கள் காலப்பகையை பெற்றிருந்தால், உங்கள் குடும்பத்தின் வளர்ச்சி என்பது தேக்கமடையலாம் அல்லது முன்னேற்றம் என்பது தடைப்படலாம் அல்லது தோல்விகள் தொடர்ந்து ஏற்பட்டு வீழ்ச்சிகள் உண்டாகலாம். இதனால் காலப்பகை குறித்த விடயத்தை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

காலப்பகை குறித்த பிரத்தியேக குறிப்புகளை கீழே காணலாம்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய சனி பகவானின் நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பிறந்த தருணத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை காலப்பகை எனும் தோஷம் ஏற்பட்டு, அந்த குடும்பத்துக்கு நன்மைகள் ஏதும் பெரிதாக நடைபெறாது. குறிப்பாக பொருளாதார பற்றாக்குறை ஏற்படும்.

ராகு பகவானின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை பிறந்த மூன்று வயதிலிருந்து 11 வயதுக்குள் ராகு திசை நடைபெற்றால், அந்த காலகட்டம் வரை காலப்பகை ஏற்பட்டு, குடும்பத்துக்கு நன்மைகள் எதுவும் நடைபெறாது. குறிப்பாக அவமானம், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.

ஒருவருக்கு 12 வயது முதல் 18 வயது வரை சூரிய திசை நடந்தால், அந்த திசை முழுவதும் அவருக்கு காலப்பகையாக மாறி, குடும்ப உறுப்பினர்களுக்கும் குடும்பத்துக்கும் தோல்விகளையும் வீழ்ச்சிகளையும் அளிக்கும்.

அதைத் தொடர்ந்து 18 வயது முதல் 34 வயதுக்குள் ஒருவருக்கு சந்திர திசை நடந்தால், அந்த திசை அவருக்கு காலப்பகையாக மாறி தொல்லைகளைத் தொடர்ச்சியாக அளிக்கும்.

35 வயது முதல் 52 வயது வரை ஒருவருக்கு சுக்கிர தசை நடந்தால்... அந்த திசை அவருக்கு காலப்பகையாக மாறி வெற்றியை தராமல் தோல்வியை தொடர்ச்சியாக தரும்.

52 வயது முதல் 62 வயது வரை ஒருவருக்கு கேது திசை நடந்தால், அந்த திசை அவருக்கு காலப்பகையாக மாறி கெடு பலன்களை வழங்கும்.

63 வயது முதல் 100 வயது வரை ஒருவருக்கு புதன் திசை நடந்தால், அந்த திசை அவருக்கு காலப்பகையாக மாறும். அதனால் ஒருவருக்கு இந்தந்த வயதுகளில் இந்தந்த திசை நடந்தால், அது காலக்கணித முறைப்படி காலப்பகையாக இருந்தால், நீங்கள் எந்த பரிகாரத்தை மேற்கொண்டாலும் அது பலனளிக்காது என்பதை முதலில் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். இதற்கான மாற்று உபாயத்தை அனுபவமிக்க ஜோதிட நிபுணர்களும் கேட்டு அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும்.

திசை மட்டுமல்ல, ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கிரகத்தின் புத்தியும் காலப் பகையாக மாறி, கெடுபலன்கள் வழங்கி, நிம்மதியை குலைத்து வீட்டிலேயே முடக்கிவிடும். அந்த வகையில் கீழ்கண்ட திசைகளில் குறிப்பிட்ட கிரகத்தின் புத்தி காலப்பகையாக மாறும் என்பதற்கான பட்டியலைக் காணலாம்.

செவ்வாய் திசையில் சனி புத்தியும், சனி திசையில் செவ்வாய் புத்தியும் காலப்பகையாக வேலை செய்யும்.

சுக்கிர திசையில் சூரிய புத்தியும், சூரிய திசையில் சுக்கிர புத்தியும் காலப்பகையாக மாறும்.

புதன் திசையில் ராகு புத்தியும், ராகு திசையில் புதன் புத்தியும் காலப்பகையாக மாறும்.

சந்திர திசையில் குரு புத்தியும், குரு திசையில் சந்திர புத்தியும் காலப்பகையாக மாறும்.

கேது திசையில் சனி புத்தியும், சனி திசையில் கேது புத்தியும் காலப்பகையாக மாறும்.

எனவே, உங்களுக்கு எந்த திசை எந்த புத்தி நடக்கிறது என்பதை சோதிட நிபுணர்களிடம் தெரிந்துகொண்டு, அது காலப்பகையாக இருக்கிறதா என்பதையும் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள். 

காலப் பகையாக இருந்தால், அது தொடர்பான சோதிட மற்றும் ஆன்மிக விழிப்புணர்வை பெற்று, புத்திசாலித்தனம் மிக்க புதன் பகவான் ஆதிக்கம் பெற்ற ஜோதிட நிபுணர்களிடம் சென்று, அவர்கள் வழங்கும் ஆலோசனையை பின்பற்றினால் உங்களால் காலப்பகையிலிருந்து ஓரளவு நிவாரணம் பெற முடியும்.

தகவல் : சிவா

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15