ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'லப்பர் பந்து' பட அப்டேட்

23 Feb, 2024 | 10:04 PM
image

'பார்க்கிங்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் சந்தை மதிப்பு கொண்ட நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லப்பர் பந்து' படத்தில் இடம்பெற்ற 'ஆச உறவே..' எனும் பாடலையும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லப்பர் பந்து' எனும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், 'அட்டக்கத்தி' தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லட்சுமணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற 'என்ன விட்டு போவேன்னு தான் நானு  நெனைக்கல..' என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். சோகப் பாடலாகவும், மெல்லிசையாகவும் உருவாகி இருக்கும் இந்த பாடலில் ஷான் ரோல்டனின் குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35