மூன்று நாட்கள் பணி பகிஷ்ரிப்பில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் இன்று வேலைக்கு திரும்பினார்கள்

Published By: Digital Desk 3

23 Feb, 2024 | 03:06 PM
image

நுவரெலியாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு கீழ் இயங்கும் பீற்று தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட நேஸ்பி தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக பணி நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்து தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பை கைவிட்டு இன்று வெள்ளிக்கிழமை (23) வேலைக்கு திரும்பினார்கள்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பட்டுள்ள  10 ஆயிரம் தனி வீடுகள் அமைக்கும்  திட்டத்தில் ஆரம்ப கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 1300 தனி வீடு திட்டத்தில்  நுவரெலியா நேஸ்பி தோட்ட  மக்களுக்கும் தனி வீடுகள் கிடைக்கவுள்ளது. இந்நிலையில், 53 வீடுகளுக்கு நேஸ்பி தோட்டத்தில் 05 ஏக்கர்களை கொண்டுள்ள இலக்கம் 02 தேயிலை மலையில் வீடுகள் அமைக்க தோட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்து இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்தனர்.

அதேநேரத்தில் நுவரெலியா நேஸ்பி தோட்டம் இயற்கை அழகை ரசிக்க கூடிய பார்வைக்கு உட்பட்ட தோட்டமாகும்.

48.81 ஹெக்டயர் நிலப்பரப்பை கொண்ட இந்த தோட்டத்தில் பார்வைக்கு இடமான தேயிலை நிலங்கள் கடந்த காலங்களில் பௌத்த விகாரை,முஸ்லிம் பாடசாலை,மற்றும் கிராமங்கள் அமைக்கவென தேயிலை நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் இந்திய அரசாங்க நிதி உதவியின் கீழ் இத்தோட்ட தொழிலாளர்களுக்கும் 53 வீடுகள் கட்டித் தருவதாக கூறப்பட்டுள்தாக தெரிவிக்கும் தொழிலாளர்கள் அவ்வீடுகளை போக்குவரத்து, குடி நீர், மின்சாரம் மற்றும் சகல வசதிகளுக்கும் ஏதுவான இலக்கம் 02 தேயிலை மலையில் ஒரே கிராமமாக அமைத்து கொடுக்க இடத்தை ஒதுக்கி தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் முன் வைத்துள்ளனர்.

இவ்வாறு தொழிலாளர்கள் முன் வைத்துள்ள கோரிக்கையை தோட்ட  நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதுடன், மாறாக  மக்கள் வசிப்புக்கு ஏற்புடையாத தோட்ட மயானம் அமைந்துள்ள இலக்கம் (02 A) தேயிலை மலையில் வீடுகட்ட இடம் தருவதாக தோட்ட நிர்வாகம் கூறியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஆட்சேபத்துக்குரிய தொழிலாளர்கள் தமக்கு உகந்த இலக்கம் (02) தேயிலை மலையில் தான் வீடுகள் கட்ட இடம் வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ளதுடன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை தாம் தொழிலுக்கு செல்வதில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் நேஸ்பி தோட்டத்தில் பார்வைக்கு இடமான தேயிலை நிலங்கள் தனியார்களால் சுவீகரிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய தொழிலாளர்கள் இத் தோட்டத்தில் பலர் வீடுகள் இன்றி தோட்ட வீடுகளுக்கு மாத வாடகை வழங்கி வசித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் விடயம் அறிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பிரதநிதிகளான நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜன்,ஜெயராம் வினோத்ஜீ உள்ளிட்ட இ.தொ.கா நுவரெலியா பணிமனை இயக்குனர் பி. ராஜாராம், மாவட்ட பிரதிநிதி ரமேஸ் ஆகியோர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன்,

தொழிலாளர்களை பணிக்கு செல்லுமாறும்,எதிர்வரும் புதன் கிழமை (28 ) அன்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், இந்திய அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து இந்த 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை வழங்கியுள்ளது. எனவே, இ.தொ.காவை பலப்படுத்தும் நேஸ்பி தோட்ட மக்கள் எதிர் கட்சிகளின் மகுடி ஊதலுக்கு மயங்கி வீதிக்கு இறங்காது ஒருமுகமாக இருங்கள் நிச்சயம் மக்களுக்கு ஏற்ற இடத்தில் வீடுகள் அமைக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜன் தெரிவித்தார்.

அதேநேரத்தில் இந்திய அரசாங்கம் எம் மக்களுக்கு வழங்கியுள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கு பிள்ளையார் சுழி இட்டது மனோ கணேசன் இல்லை அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகையால் மக்கள் பயப்பட தேவையில்லை நேஸ்பி மக்கள் வரும்பிய இடமும் ,வீடும் ஜீவன் தொண்டமான் பெற்று தருவார் எனவும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க சீத்தா எளிய சீதையம்மன் ஆலயத்திற்கு புதன்கிழமை (21) விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமானை நேஸ்பி தோட்ட மக்கள் கிறேகறி தெப்பக்குள பகுதியில் சந்தித்துள்ளனர். இதன்போது தோட்ட நிர்வாகத்திடம் பேசி இடத்தை பெற்று தாருங்கள் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டுகிறேன் என அமைச்சர் கூறியதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17